Tuesday, April 28, 2009

ஹெல்தி புட்டு

கேழ்வரகு = கால் கப்
கம்பு = கால் கப்
சோளம் = கால் கப்
பட்டாணி = கால் கப்
சிகப்பரிசி = கால் கப்
முந்திரி பாதம் = கால் கப்
கொண்டை கடலை= கால் கப்
சோயா பீன்ஸ் = கால் கப்
பார்லி = கால் கப்

பிரவுன் பர்கல் = கால் கப்
கேரட் துருவியது = தேவைக்கு
துளசி இலைகள் = சிறிது


1. மேற் கூறிய அனைத்து பொருட்களையும் கேரட், துளசி தவிர புட்டு மாவு பதத்திற்கு திரித்து வைத்து கொள்ளவும்.

2. அதிலிருந்து தேவைக்கு ஒரு கப்போ அல்லது இரண்டு கப்போ எடுத்து கலக்கி செய்யவும்.

3. புட்டு அவிக்கும் போது அத்துடன் கேரட், துளசி இலைகளை தூளாக்கி கலந்து அவிப்பதற்கு அரை மணி நேரம் முன்னாதாக புட்டு மாவை ஊறவைகக்வும்.

4. புட்டு மாவு கலக்கும் போது கட்டி இல்லாமல் சாஃப்டாக கலந்து வைக்கவும்.

5. இட்லி பானையில் ஈர துணையை விரித்து அவித்து எடுக்கவும்.

6. குழந்தைகளுக்கு சர்க்க‌ரை, நெய் , தேங்காய் சேர்த்து கலந்து கொடுக்கவும்.

7. பெரியவர்கள் தேவையான அளவிற்கு கொஞ்சம சேர்த்து சாப்பிடவும்.

8. இல்லை கடலை குழம்பு செய்து இதனுடன் சேர்த்து சாப்பிடலாம்.



குறிப்பு: ரிச் புரோட்டீன், அயர்ன்,பீ காம்ப்லெக்ஸ் அடங்கி உள்ளது இந்த புட்டு மாவில் இவை அனைத்தையும் திரிக்க முடியாதவர்கள் இருக்கும் பொருட்களை மட்டும் சேர்த்து கொள்ளலாம்.

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா