Saturday, April 4, 2009

கிட்ஸ் லாலி பாப்

கிட்ஸ் லாலி பாப்







லெக் பீஸ் = 900 கிராம் (ஒரு பாக்கெட்)14 pcs

வினிக‌ர் ‍= ஒரு மேசை க‌ர‌ண்டி

காஷ்மீரி சில்லி ப‌வுட‌ர் = ஒரு மேசை க‌ர‌ண்டி

ரெடி க‌ல‌ர் பொடி = கால் தேக்க‌ர‌ண்டி

உப்பு தூள் = ஒன்ன‌றை தேக்க‌ர‌ண்டி

மிள‌கு தூள் ‍ ஒரு தேக்க‌ர‌ண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு தேக்க‌ர‌ண்டி



எலுமிச்சை ‍= ஒன்று சிறிய‌து

த‌யிர் ‍ = ஒரு மேசை க‌ர‌ண்டி

முட்டை = ஒன்று

மைதா = ஒரு குழி க‌ரண்டி



எண்ணை = பொரிக்க‌ தேவையான‌ அளவு



அல‌ங்க‌ரிக்க‌



கேர‌ட்



வெள்ள‌ரி



த‌க்காளி



எலுமிச்சை



கொத்தும‌ல்லி த‌ழை



செய்முறை



1.சிக்க‌ன் லெக் பீஸை தோலெடுத்து வினிக‌ர் சேர்த்து ஊற‌வைத்து 5, 6 முறை க‌ழுவி குறுக்காக‌ ஆழ‌மாக‌ கீறி விட்டு த‌ண்ணீரை வ‌டித்து வைக்க‌வும்.



2. தேவையான‌ அனைத்து பொருட்க‌ளையும் த‌யாராக‌ வைக்க‌வும். (தூள் வ‌கைக‌ள்,முட்டை,மைதா,எலுமிச்சை,த‌யிர்,உப்பு, எண்ணை,சிறிது கொத்தும‌ல்லி த‌ழை)



3.முட்டை மைதா த‌விர‌ ம‌ற்ற‌ அனைத்து பொருட்க‌ளையும் சிக்க‌னில் சேர்க்க‌வும்.



4. ந‌ன்கு பிசைந்து ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.



5.பிற‌கு முட்டை மைதா சேர்த்து பிசைய‌வும்.

6.சிக்க‌னை பிரிட்ஜில் இர‌ண்டு ம‌ணி நேர‌ம் ஊற‌வைக்க‌வும்.

7.இர‌ண்டு ம‌ணி நேர‌ம் க‌ழித்து ஒரு வாய‌க‌ன்ற‌ இரும்பு வான‌லியில் பொரிக்க‌ தேவையான‌ அள‌வு எண்ணை ஊற்றி, நான்கு நான்கு பீஸாகாக‌ போட்டு பொரிக்க‌வும்.

8.தீயை மீடிய‌மாக‌ வைத்து மூடி போட்டு ந‌ன்கு வேக‌விட‌வும்.



9.வெந்த‌தும் தீயை சிறிது அதிக‌ ப‌டுத்தி ந‌ல்ல‌ பொரிந்த‌தும் எடுத்து எண்ணையை வ‌டிக்க‌வும்.



10.சுவையான‌ ஷாஃப்ட் கிட்ஸ் அன்ட் கிரிஸ்பி கிட்ஸ் லாலி பாப் ரெடி.





குறிப்பு:



இது நான் செய்யும் ப‌ல‌ வகையான‌ சிக்க‌ன் பிரையில் இதுவும் ஒன்று.

குழ‌ந்தைக‌ளுக்கு சிக்க‌ன் தான் ரொம்ப‌ பிடிக்கும். இது ந‌ல்ல‌ முட்டை மைதா கொடுத்து ஊற‌வைப்ப‌தால் உள்ளே ந‌ல்ல‌ ஷாஃப்டாக‌வும் வெளியில் கிரிஸ்பியாக‌வும் இருக்கும். அதுவும் எல்லா குழந்தைகளுக்கும் பிடித்தது லாலி பாப்பும், சிக்க‌ன் விங்க்ஸ்ஸும் தான்.ந‌ல்ல அல‌ங்க‌ரித்து கொடுக்க‌வும்.







இப்ப‌டி பொரிப்ப‌தால் எண்ணை கிளிய‌ராக‌ இருக்கும்.சில‌ வ‌கை சிக்க‌ன் பொரிக்கும் போது எண்ணையில் ம‌சாலா அனைத்து போல் ச‌ட்டியில் அடியில் போய் ஒட்டி கொள்ளும்.

ஜ‌லீலா



0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா