Tuesday, June 9, 2009

தலைவலியா? ஒற்றை தலைவலியா? ஆமாம்பா ஆமாம்.



ஆ தலை வலி மண்டைய பிளக்குதே, இது எல்லோரும் சொல்வது.

சிலருக்கு வெயிலில் போனால் தலைவலி, சிலருக்கு டென்ஷன் ஆனால் தலைவலி, சிலருக்கு ஆபிஸ் டெஷனால் தலைவலி, பெண்களுக்கு அடிக்கடி ஒற்றை தலைவலிவரும்.

ஒருபக்கமா கண், நெற்றி பொட்டு எல்லாம் வின் வின் என்று குத்தும், தொழும் போது குனியமுடியாது முழு மண்டையின் பாரம் வந்து விழுவது போல் இருக்கும்,

சிலருக்கு பிள்ளைகள் சண்டையால் தலைவலி,சத்தமாக பக்கத்துவீட்டில் பாட்டு கேட்டு கொண்டு இருந்தால் கூட தலைய என்னவோ பண்ணுவது போல் இருக்கும்.

மாணவர்களுக்கு அட்வைஸ் பெரிய தலை வலி தான்.அம்மாவுடைய‌ திட்டுக‌ளும் த‌லை வ‌லிதான்.


சில‌ருக்கு ச‌ரியா மோஷ‌ன் போக‌வில்லை என்றாலும் த‌லை வ‌லி வ‌ரும்.


பிள்ளைக‌ளுக்கும் த‌லைவ‌லி தான் அம்மா கார்டூன் பார்க்க‌ விட‌வில்லை என்றால், சில‌ பிள்ளைக‌ளுக்கு புக்கை பார்த்தேலே த‌லை வ‌லி தான்..
இப்ப‌டி சொல்லி கொண்டே போக‌லாம்.

இதெல்லாத்துக்கும் ம‌ருந்து இஞ்சி சாறு தேன் கலந்து குடிப்பதும், ஆவி பிடிப்பதும் நல்ல எபட்டிவ்வாக இருக்கும். (எந்த‌ சுடுகாட்டில் என்று கேட்காதீர்க‌ள்)


ஆனால் தொட‌ர்ந்து மாத‌ க‌ண‌க்காக‌ த‌லை வ‌லி இருப்ப‌வ‌ர்க‌ள் உட‌னே டாக்ட‌ரை அனுக‌வும், இது கிட்னி பிராப்ள‌மாக‌ கூட‌ இருக்க‌லாம்.



1. இஞ்சி சாறு

இஞ்சி சாற்றை த‌லையில் தேய்ப்ப‌த‌ன் மூல‌ம் சிறிது விடுத‌லை பெறலாம்.இஞ்சி 50 கிராம் எடுத்து கொள்ளுங்க‌ள்.

அதை த‌ண்ணீர் ப‌ட‌மால் அதாவ‌து க‌ழுவ‌வாம‌ல் தோலை நீக்கி விட்டு ஈர‌மில்லாம‌ல் காய்ந்த‌ மிக்சியில் போட்டு அரைத்து ஒரு ட‌ம்ள‌ரில் சாறை பிழிந்து எடுங்க‌ள்.

சிறிது நேர‌ம் க‌ழித்து பார்த்தால் கீழே ந‌ஞ்சு த‌ங்கி இருக்கும் வெள்ளை ப‌டிவ‌ம் போல் தெளிந்த‌ சாறைம‌ட்டும் எடுத்து ஒரு மெல்லிய‌ துணியை தீயில் எரிய‌விட்டு அப்ப‌டியே அந்த‌ ச‌றில் போட‌வும் , போட்ட‌தும் அனைந்து விடும்.

இப்போது அந்த‌ சாறை கை விர‌ல்க‌ளால் எடுத்து ந‌டு ம‌ண்டை, பின் ம‌ண்டை நெற்றி பொருத்து காது ம‌ட‌ல் போன்ற‌ இட‌ங்க‌ளில் த‌ட‌வி விட‌வும்.

கொஞ்ச‌ நேர‌த்தில் த‌லையில் உள்ள‌ நீரை எடுத்து விடும் த‌லை வ‌லி, பார‌மும் சிறிது விடும், பிற‌கு ஒரு இஞ்சி டீ (அ) இஞ்சி காப்பி குடிக்க‌வும்.
ந‌ல்ல‌ அமைதியான‌ இட‌த்தில் ரெஸ்ட் எடுங்க‌ள் .


2. ஆவி பிடிப்ப‌து
****************


ஆவி பிடிப்ப‌து த‌லைவ‌லி, த‌லைபார‌ம்,ச‌ளி, மூக்க‌டைப்பு எல்லாத்துக்குமே இதான் ம‌ருந்து.
கொதிக்க‌ கொதிக்க‌ வெண்ணீர் எடுத்து கொள்ளுங்க‌ள், அதில் சுக்கு (அ) ச‌ர்க்க‌ரை (அ) ஏதாவ‌து தைல‌ம் ஒரு சொட்டு தான் விட‌னும் ,இல்லை என்றால் முக‌ம் பொத்து போய் விடும், ஆவி பிடிக்கும் முன் முக‌த்தில் ஏதாவ‌து கிரீம் த‌ட‌வு கொள்ள‌லாம்.
ஆவி பிடிக்கும் போது முக‌த்திற்கும் வெண்ணீர் பாத்திர‌த்திற்கும் ஒரு ஜான் அள‌வு இடைவெளி இருக்க‌ட்டும்.
பேன், ஏசி எல்லாம் ஆஃப் ப‌ண்ணி கொள்ளுங்க‌ள், தொட‌ர்ந்து இர‌ண்டு முன்று த‌ட‌வை பிடிங்க‌ள்.
எதுவும் இல்லை என்றால் வெரும் வெண்ணீரே போதுமான‌து.


3. இஞ்சி சாறு குடிக்க‌
**********************

50 கிராம் இஞ்சியை தோல் சீவி வெண்ணீரில் க‌ழுவி அதை ப‌ட்டு போல் அரைக்க‌வேண்டாம், இர‌ண்டு திருப்பு திருப்பினாலே போதும் எடுத்து ஒரு ட‌ம்ள‌ரில் வ‌டிக‌ட்டியில் பிழிந்து சாறில் உள்ள நஞ்சை உறைய விடுங்கள்.

பிழிந்த இஞ்சி சக்கையை பிரிட்ஜில் வையுங்கள், இரண்டு முன்று நாட்களுக்கு டீ போட பயன் படுத்தி கொள்ளலாம்.

மேலோடு தெளிந்து நிற்கும் சாறில் தேவைக்கு தேன் க‌ல‌ந்து ஒரு க‌ல் உப்பு சேர்த்து முன்று தேக்க‌ர‌ண்டி அள‌விற்கு குடிக்க‌வும்.



4. சோம்பு இஞ்சி காப்பி
************************

பால் = ஒரு டம்ளர்
தண்ணீர் = அரை டம்ளர்
சர்க்கரை தேவைக்கு
சோம்பு தூள் = அரை தேக்கரண்டி
துருவிய இஞ்சி = ஒரு தேக்கரண்டி
இன்ஸ்டன் காபி பொடி = ஒரு பின்ச்

த‌ண்ணீரில் இஞ்சி ம‌ற்றும் சோம்பு தூளை போட்டு ந‌ன்கு கொதித்து கால் ட‌ம்ள‌ராக‌ வ‌ற்ற‌விட்டு அதில் சுடான‌ பால், ச‌ர்க்க‌ரை , க‌ல‌ந்து வ‌டிக‌ட்டி காபி பொடி சேர்த்து க‌ல‌க்கி குடிக்க‌வும்.


இந்த‌ இஞ்சி காபி குடிப்ப‌தால் மோஷ‌ன் பிராப்ள‌த்திற்கு குட் பை சொல்ல‌லாம்.
க‌டுங்குளிர் வாட்டும் போது கை கால் ஐஸ் போல் ஆகும் அந்த‌ நேர‌த்திலும் இதை குடிக்க‌லாம், பிள்ளை பெற்ற‌வ‌ர்க‌ளும் இதை குடிக்க‌லாம்.

4 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

நல்ல பயனுள்ள தகவல்கள். பிரிண்ட் போட்டு எங்க வீட்டுக்கும் பாக்ஸ் (Fax) அனுப்பிட்டேன்.
ரொம்ப நன்றி சகோதரி

Jaleela said...

சகோதரர் நவாஸ்,

இது அவசியம் எல்லா பெண்களுக்கும் தேவையான டிப்ஸ்.

இன்னும் நாலு பாயிண்ட் எழுதல பிறகு தான் சேர்க்கனும்.

ஓ உடனே வீட்டுக்கும் அனுப்பிவிட்டீர்களா? ரொம்பவே ஸ்பீடு தான்.

S.A. நவாஸுதீன் said...

என் மனைவிக்கு இந்த பிரச்னை உண்டு. அதான் இத்தனை பாஸ்ட்

ஷ‌ஃபிக்ஸ் said...

மிக்க பயனுள்ள தகவல்களா பதிவு செய்ரீங்க, நன்றிகள்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா