Tuesday, June 23, 2009

இறைவனிடம் மட்டும் இறைஞ்சுவோம்.

பெற்ற தாயினும் தொன்னூற்றொன்பது மடங்கு கருணை மிக்கவன் அல்லாஹ்; தாய்ப் பறவை தன் குஞ்சுகளிடத்தில் காட்டுகின்ற அன்பை விட ஆயிரம் மடங்கு அன்பைநம்மீது பொழிபவன் அல்லாஹ்.



1. "இறைவா! தொழுகையை நிலை நிறுத்துவோராக என்னையும் என்னுடைய சந்தியிலுள்ளோரையும் ஆக்குவாயாக!"

2. இறைவா எனக்கு ஸாலிகான நற்குணமுடைய மகனைத் தருவாயாக"

3. "இறைவா! எனக்காக என் என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கித் தருவாயாக! என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக! என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!"

4. "எங்கள் இறைவா! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! நீராகரிக்கும் மக்களிடமிருந்து உன்னாருளால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!"

5. "இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவயாக!"

6. "எங்க‌ள் இறைவா! எங்க‌ளுக்கு இவ்வுல‌கில் ந‌ற்பாக்கிய‌ங்க‌லைத் த‌ருவாயாக‌! ம‌றுமையிலும் ந‌ற்பாக்கிய‌ங்க‌ளைத் த‌ருவாயாக‌! எங்க‌ளை ந‌ர‌க‌ வேத‌னையிலிருந்தும் காத்த‌ருள்வாயாக‌!"

7. "எங்க‌ள் இறைவா! நீ எங்க‌ளுக்கு நேர்வ‌ழியைக் காட்டிய‌ பின் எங்க‌ள் இத‌ய‌ங்க‌ளை (அதிலிருந்து) த‌வ‌றுமாறு செய்து விடாதிருப்பாயாக‌! மேலும் நீ உன் புற‌த்திலிருந்து எங்க‌ளுக்கு ந‌ல்ல‌ருளை அளிப்பாயாக‌! நிச்ச‌ய‌மாக‌ நீயே பெருங்கொடையாள‌ன்"

8. "எங்க‌ள் இறைவா! நாங்க‌ள் (இவ்வேத‌த்தின் மீது) ந‌ம்பிக்கைக் கொண்டோம். என‌வே (இவ்வேத‌ம் ச‌த்திய‌மான‌தென்று) சாட்சி கூறுவோருட‌ன் எங்க‌ளையும் நீ ப‌திவு செய்து கொள்வாயாக‌"

2 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

நல்ல உயர்வான பணியை செய்து கொண்டு இருக்கின்றீர்கள். தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்

Jaleela said...

நவாஸ் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, எனக்கும் எதுவும் தெரியாது, யார் என்ன தூஆ தந்தாலும் அதை பிட்டு பிட்டாக சேர்த்து வைத்து கொள்வேன், சில நேரம் எடுத்து ஓதவும் மறந்து விடும் பேப்பரை எங்கு வைத்தோம் என்று தெரியாது, சேகரித்துள்ளதை தான் ஒவ்வொன்றாக போட்டு கொன்டு இருக்கிறேன்.

இதன் மூலம் பார்க்கும் போதெல்லாம் ஓதிக்கொள்ளல்லாம் என்று தான் போட்டு வ‌ருகிறேன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா