Saturday, August 22, 2009

வெள்ளை வாயு க‌ஞ்சி


வெள்ளை நோன்பு கஞ்சியும், பொட்டு கடலை துவையலும்..

இது இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு காலத்தில் செய்யும் பல வகை கஞ்சியில் இதுவும் ஒரு வகையாகும்.
இது வெள்ளை தேங்காய் பால் கஞ்சி, அல்சர் உள்ளவர்களுக்கு, ஜுரம் வந்தவர்களுக்கும் கொடுக்கலாம்.

தேவையான‌ பொருட்க‌ள்


வேக‌வைக்க‌

ர‌வை போல் பொடித்த‌ அரிசி (நொய்) = அரை ட‌ம்ளர்
வ‌ருத்த‌ பாசி ப‌ருப்பு = ஒரு மேசை க‌ர‌ண்டி
மிள‌கு = 7
சீர‌க‌ம் = ஒரு தேக்க‌ர‌ண்டி
பூண்டு = ஐந்து பல்
உப்பு = ருசிக்கு தேவையான‌ அளவு
வெந்தயம் = நான்கு

தாளிக்க‌

எண்ணை = ஒரு தேக்க‌ர‌ண்டி
நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி
ப‌ட்டை = ஒரு சிறிய‌ துண்டு
சின்ன‌ வெங்காய‌ம் = நான்கு (பொடியாக அரிந்த‌து)
இஞ்சி பூண்டு பேஸ்ட் = அரை தேக்க‌ர‌ண்டி
கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது
தேங்காய் பால் = அரை ட‌ம்ள‌ர்

செய்முறை

1. அரிசி நொயையும் ,வெந்தயம், பாசி ப‌ருப்பையும் க‌ளைந்து அரை ம‌ணி நேர‌ம் ஊற‌வைக்க‌வும்.

2. அதில் பூண்டு, மிள‌கு, சீர‌க‌ம்,உப்பு சேர்த்து முன்று ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து ந‌ன்கு வேக‌ விட‌வும். குக்க‌ரில் வேக‌வைக்கும் போது தீயின் அன‌லை குறைத்து வைக்க‌வும்.இல்லை என்றால் விசில் வ‌ரும் போது தெரிக்கும்.இது இர‌ண்டு முன்று விசிலில் வெந்து விடும்.

3. சூடாக‌ இருக்கும் போதே ச‌ற்று கிள‌றி விட்டு, ரொம்ப‌ க‌ட்டியாக‌ இருந்தால் சிறிது த‌ண்ணீர் சேர்த்து கொதிக்க‌ விட‌வும்.

4. தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை முத‌லில் த‌னியாக‌ ஒரு சிறிய‌ தாளிக்கும் ச‌ட்டியில் எண்ணை + நெய் ஊற்றி ப‌ட்டையை போட்டு வெடிக்க‌ விட்டு சின்ன‌வெங்காய‌ம் சேர்த்து வ‌த‌க்க‌வும்.

5. அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கொத்தும‌ல்லி த‌ழையும் தேங்காய் பாலும் சேர்த்து வெந்து வைத்துள்ள‌ க‌ஞ்சியில் சேர்த்து கொதிக்க‌ விட்டு இர‌க‌க்வும்.

இத‌ற்கு தொட்டு கொள்ள‌ பொட்டுக‌ட‌லை துவைய‌ல் ரொம்ப‌ ந‌ல்ல‌ இருக்கும். (அ) புதினா துவைய‌லும் தொட்டு சாப்பிட‌லாம்.


பொட்டு க‌ட‌லை துவைய‌ல்

தேவையான பொருட்கள்

பொட்டு க‌ட‌லை = கைக்கு ஒரு கை பிடி
தேங்காய் ப‌த்தை = இர‌ண்டு
ப‌ச்ச‌மிள‌காய் = ஒன்று
இஞ்சி சிறிய‌ துண்டு
வெங்காய‌ம் = கால் துண்டு
உப்பு = ருசிக்கு தேவையான‌ அள‌வு

செய்முறை

1.முத‌லில் தேங்காய் ப‌த்தை + ப‌ச்ச‌மிள‌காய் பொட்டு க‌ட‌லையை சேர்த்து அரைக்க‌வும்.
2. பாதி அரைந்த‌தும் இஞ்சி + வெங்காயம் + உப்பு சேர்த்து அரைத்து எடுக்க‌வும்.


குறிப்பு:

நோன்பு கால‌த்தில் வெள்ளை க‌ஞ்சி , ம‌சால் வ‌டை, பொட்டு க‌ட‌லை துவைய‌ல் தொட்டு சாப்பிட‌ இத‌மாக‌ இருக்கும்.
இது நோன்பு கால‌த்தில் இஸ்லாமிய‌ இல்ல‌ங்க‌ளில் செய்யும் ப‌ல‌ வ‌கை க‌ஞ்சியில் இதுவும் ஒரு வ‌கையாகும்.
இது வாயு தொல்லை, கேஸ் பிராப்ள‌ம் உள்ள‌வ‌ர்க‌ள்,வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கு கார‌ம் இல்லாம‌ல் சாப்பிட‌ கொடுக்கும் ஒரு ச‌த்தான‌ ஆகார‌ம், இதை பிர‌வுன் கோதுமை ப‌ர்க‌லிலும் செய்ய‌லாம்.

14 கருத்துகள்:

SUFFIX said...

எங்க ஊரு நோன்புக் கஞ்சி வேறு முறையில் செய்வாங்க, எத்தனை எத்தனை வகைகள்ப்பா இந்த கஞ்சிகளில்!! இந்த பதிவுல உள்ள கஞ்சியும் துவையலும், எங்க வீட்டுல காலை சிற்றுண்டிக்கு அடிக்கடி செய்வோம்.

Malini's Signature said...

அக்கா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

சீமான்கனி said...

//நோன்பு கால‌த்தில் வெள்ளை க‌ஞ்சி , ம‌சால் வ‌டை, பொட்டு க‌ட‌லை துவைய‌ல் தொட்டு சாப்பிட‌ இத‌மாக‌ இருக்கும்//நோன்பு முடிவதற்குள் ட்ரை பண்ணிடுவோம்....
உங்களுக்கு பிறந்தநாள் ஆ ....????

அக்கா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

சீமான்கனி said...

இன்ன்ஷா அல்லா ....

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாழ்க வளமுடன்....

Jaleela Kamal said...

ஆமாம் ஷபிக்ஸ் காலை சிற்றுண்டி க்கு இத்துடன் நெத்திலி கருவாடு வருத்து வைப்பார்கள்,
ஜுரம் என்றால் இந்த கஞ்சியுட பருப்பு துவையல், கர்பிணி பெண்களுக்கு இந்த கஞ்சியுடன் புதினா துவையல் , வயிறு பிராப்ளம், அல்சர் உள்ளவர்களுக்கு இத்துடன் பொட்டு கடலை துவையல் காரம் கம்மியாக போட்டு ,இது குழந்தைகளுக்கும் ஊட்டி விடலாம்.

Jaleela Kamal said...

நன்றி ஹர்ஷினி அம்மா

Jaleela Kamal said...

சீமான் கனி நோன்பு முடிவதற்குள்.செய்து பாருங்கள். ஆமாம் பிற‌ந்த‌ நாள் தான்

Jaleela Kamal said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

Jaleela Kamal said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி.raj

தாஜ் said...

salam jaleelaa

உங்கள் வெரைடியான நோன்பு கஞ்சி சூப்பரோ சூப்பர்

Jaleela Kamal said...

வாஅலைக்கும் ஸலாம் தாஜ் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றீ

Anonymous said...

சூப்பர் ரெசிப்பி.

Jaleela Kamal said...

நன்றி அம்மு , இது வயிறுக்கு இதமான லேசான உணவு.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா