Sunday, August 2, 2009

குழ‌ந்தைக‌ளை உஷாராக‌ க‌ண்காணிக்க‌னும்




குழ‌ந்தைக‌ளை உஷாராக‌ க‌ண்காணிக்க‌னும்.இல்லை என்றால்
கண் இமைக்கும் நேர‌த்திற்குள் என்ன‌ என்ன‌வோ செய்வார்க‌ள்.


குழந்தைகள் இருக்கும் இடத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக கண்காணிக்கவும்.

பிரிட்ஜ், கிச்சன் கேபினெட்,பீரோ , மின்சார வொயர்கள் எல்லாத்தை சரியாக இருக்கிறதா என்று அப்ப அபப் செக் பண்ணி கொண்டே இருக்கனும்.

பிரிட்ஜில் உள்ள் பொருட்களை இழுத்து போடுவார்கள்.சாப்பாட்டு பொருட்கள் அதிகமாக இருப்பதால் சப்பு கொட்டி கொண்டு அதை எட்டி பார்க்க ஓடுவார்கள்.

கிச்சன் கேபினேட்டில் கத்தி, கத்திரிகோல், ஊறுகாய் பாட்டில்கள் எல்லாத்தையும் இழுத்து போடுவார்கள்.

டீவி, மிசி,போன் சார்ஜ் செய்யும் வொயர்களை எடுத்து கடித்து கொண்டு இருப்பார்கள்.

பீரோவில் அப்ப தான் துணியை அடுக்கி வைப்பீர்கள் உடனே அவர்களும் அம்மாவை போல் வேலை பார்ப்பதாக எண்ணி ரொம்ப கவலையா எல்லாத்தையும் இழுத்து போடுவார்கள்.


ப‌வுட‌ர் ட‌ப்பா கிடைத்தால் போது வாயால் க‌டித்து ஓப்ப‌ன் செய்து அவ்வ‌ள‌த்தையும் கொட்டி அதில் ச‌ர்க்க‌ஸ் செய்வார்க‌ள்.




Haneef, Ismail




வீடு துடைக்கும் போது கூட‌ உங்க‌ள் க‌ண்பார்வையிலேயே ஓர் உய‌ர‌மான‌ இட‌த்தில் உட்கார‌வைத்து விட்டு துடைக்க‌லாம்.


க‌த‌வில் சாவியை வைக்காதீர்க‌ள் குழ‌ந்தைக‌ளுக்கு எழுந்து ந‌ட‌க்கும் போது முத‌லில் க‌ண்ணில் தென்ப‌டுவ‌து க‌த‌வில் உள்ள‌ சாவி தான் உள்ளே இருந்து பூட்டி கொள்வார்க‌ள். பிற‌கு நீங்க‌ள் வெளியில் வ‌யிற்றில் நெருப்பை க‌ட்டி கொண்டு அல்லாட‌ வேண்டிய‌து தான். இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் எல்லா இட‌த்திலும் ந‌ட‌ந்திருக்கு இதை நான் நேரில் பார்த்துள்ளேன்.

கேள்வி ப‌ட்டும் இருக்கிறேன். அப்படிதான் அபுதாபியில் எல்லாம் உய‌ர‌மான‌ க‌ட்டிட‌ம் ஆறாவ‌து எட்டாவ‌து மாடியில் ஒரு பிளாட்டில் ஒரு குழ‌ந்தை இதே போல் பூட்டி கொண்ட‌து.ஏதாவ‌து ச‌த்த‌ம் கொடுத்தால் ஜ‌ன்ன‌ல் வ‌ழியே குதிக்க‌ கூட‌ செய்யும் ந‌ம்மை தூக்க‌ வ‌ருகிறார்க‌ள் என்று ஒடி ஒளிவார்க‌ள், உட‌னே அந்த‌ குழ‌ந்தையின் தாய் ப‌க்க‌த்து வீட்டு ஜ‌ன்ன‌லில் இருந்து இந்த‌ ரூமினுல் குதித்து வ‌ந்து குழ‌ந்தையை தூக்கி கொண்டு க‌த‌வை திற‌ந்து வெளியில் வ‌ந்தார்க‌ள்.

ஆனால் அந்த‌ தாய் எங்கிருந்து காப்பாத்தினார்க‌ள் என்று வ‌ந்து எட்டி பார்த்தா யாராலும் அந்த‌ ஜ‌ன்னலிலிருந்து ப‌க்க‌த்து ஜ‌ன்னலுக்கு குதிக்க‌ முடியாதாம் எட்டி பார்த்தா த‌லை சுற்றுகிற‌தாம், அந்த‌ தாய் உய‌ர‌த்தை பார்த்து இருந்தால் காப‌ப‌த்தி இருக்க‌ முடியாது, அவ‌ர் எண்ண‌ம் எல்லாம் ரூமிற்குள் எப்ப‌டி செல்வ‌து என்று ம‌ட்டும் தான் இருந்த‌து.

//இதில் இன்னும் நிறைய‌ பாயிண்டுக‌ள் இருக்கு இப்போதைக்கு இதே நிறிஅய‌ போட்டு விட்டேன் என்று நினைக்கிறேன், இது என் குழ‌ந்தை வ‌ள‌ர்பு பிளாக‌கில் ப‌திவுக‌ள் போட‌ முடியாத‌தால் இதில் போட்டுள்ளேன்..//

13 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

என் பையன் தலைக்குக் கீழே மொத்தமும் வால்தான். என்ன பண்றதுன்னு தெரியல போங்க

S.A. நவாஸுதீன் said...

அவர்கள் கை எட்டாதவாறு பொருள்களை வைத்திருப்பது நல்லது. நல்ல யோசனைகள் சகோதரி

ஷ‌ஃபிக்ஸ் said...

//பிரிட்ஜில் உள்ள் பொருட்களை இழுத்து போடுவார்கள்.//

இதை எப்படியாவது தடுத்திடனும்ன் நாங்களும் பிர்ட்ஜ் கதவை தாழிட்டு வைத்தோம் வேண்டுமென்றே குட்டீஸ்கள் ப்ரிட்ஜ் கதவை பிடித்து ஆட்டி ஆட்டி அது ரிப்பேர் ஆனது தான் மிச்சம். அவர்களை கண்காணிப்பதும் நாம் கவனமாக இருப்பதுமே நல்லது!!

ஷ‌ஃபிக்ஸ் said...

யார் அந்த சுட்டி குட்டி, ப்ரிட்ஜில் ரொம்ப சர்வசாதாரணமாக புகுந்து விளையாடுது ஜெர்ரி மாதிரி.

Mrs.Faizakader said...

அக்கா என் பொண்ணின் வாலூ தனம் அதிகமாச்சு எல்லா பொருட்களை சேர் போட்டு ஏறி எடுக்குராள் ரொம்ப கவணாமாக தான் பார்க்கனும் இந்த வயதில். நல்ல பதிவு அக்கா

Jaleela said...

//என் பையன் தலைக்குக் கீழே மொத்தமும் வால்தான். என்ன பண்றதுன்னு தெரியல போங்க//

//அவர்கள் கை எட்டாதவாறு பொருள்களை வைத்திருப்பது நல்லது. நல்ல யோசனைகள் சகோதரி//


ஆமாம் நவாஸ் இந்த நேரத்தில் தான் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கும், தலையை சுத்தி கண்ணு இருக்கனும்.

குழ‌ந்தைக‌ள் வால் த‌ன‌ம் ப‌ண்ணால் தான் அது குழ‌ந்தையே. இந்த‌ வால் த‌ன‌மெல்லாம் ஒரு இன்ட்ரெஸ்டான‌ விஷிய‌ம்.


எல்லாம் உய‌ர‌மான‌ இட‌த்தில் வைப்ப‌து ந‌ல்ல‌து.
இந்த‌ ஸ்டேஜில் இருந்து ப‌ள்ளி அனுப்பும் வ‌ரை கொஞ்ச‌ம் க‌ழ்ட‌ப‌ட‌னும்.

Jaleela said...

//பிரிட்ஜில் உள்ள் பொருட்களை இழுத்து போடுவார்கள்.//

//இதை எப்படியாவது தடுத்திடனும்ன் நாங்களும் பிர்ட்ஜ் கதவை தாழிட்டு வைத்தோம் வேண்டுமென்றே குட்டீஸ்கள் ப்ரிட்ஜ் கதவை பிடித்து ஆட்டி ஆட்டி அது ரிப்பேர் ஆனது தான் மிச்சம். அவர்களை கண்காணிப்பதும் நாம் கவனமாக இருப்பதுமே நல்லது!!//


ஹா ஹா இது எல்லார் வீட்டிலும் நடப்பது,
இன்னும் கூட பெரிய பைஅயனும், சின்ன பையனும், பத்து தடவை திறந்து திறந்து மூடுவார்கள்.

சின்ன குழந்தைகளை கேட்கவே வேண்டாம் , நாங்களும் பூட்டு போட்டு வைத்து அவசரத்து திறக்க முடியாமல் சாவி தொலைந்து போய் படாத பாடு பட்டு இருக்கோம்.


//

Jaleela said...

//யார் அந்த சுட்டி குட்டி, ப்ரிட்ஜில் ரொம்ப சர்வசாதாரணமாக புகுந்து விளையாடுது ஜெர்ரி மாதிரி.//

ஜெர்ரி மாதிரி.// haa haa haahaa

ஹி ஹி இது எப்பவோ எழுத வேண்டிய டிப்ஸ், அனுப்ப முடியாமல் போய் விட்டது.

எனக்கு அந்த போட்டோ ரொம்ப பிடித்து இருக்கு என்னவோ சாப்பாடே கொடுக்காமல் , பெரிய புதையல் கிடைத்தமாதிரி, உள்ளே தொங்கி கொண்டு நிற்கிறது.

Jaleela said...

பாயிஜா சேர் போட்டு ஏறி என்றால் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் நீங்க பத்திர படுத்தனும்.
என்ன வேலை செய்து கொண்டு இருந்தாலும் ஒரு கண்ணு குழந்தைகள் மேல் இருந்து கொண்டே இருக்கனும்.

dhani said...

வணக்கம் அக்கா,
இந்த வலைத்தளம் எனக்கும், என்னை போன்று, பெரியவர்கள் வீட்டில் இல்லாமல் குழைந்தை வளர்ப்பவர்களுக்கும் உபயோகமானது. இந்த தளத்தை இப்போதுதான் கண்டேன். மிக மிக அருமை. உங்களுக்கு எனது நன்றிகளும், வாழ்த்துக்களும்.

Jaleela said...

வாங்க தாணி


உங்கள் வருகைக்கு நன்றி, ரொம்ப சந்தோஷம், வலது புறத்தில் என்னுடைய மற்ற பிளாக்கின் லிங்க் இருக்கு பாருஙகள் அதுவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சுந்தரா said...

நல்ல பதிவு ஜலீலா :)

பழைய நினைவுகளை அசைபோட்டுச் சிரித்தேன்.

இதிலிருக்கிற அத்தனையையும் செய்து அலைக்கழித்துவிட்டு,இப்ப அம்மாவுக்கே அடிக்கடி அட்வைஸ் பண்றாங்க... அவங்க வளர்ந்துட்டாங்களாம் :)

Jaleela Kamal said...

ரொம்ப நன்றி சுந்தரா, வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

உங்கள் பழைய நினைவுகளை இந்த பதிவின் மூலம் நினைத்து பார்த்து சிரித்தீர்களா? ரொம்ப சந்தோஷம். என்ன வளர்ந்து விட்டார்கள் என்றால் எவ்வள்வு பெரிய் பிள்ளைகள் இருக்கிறார்கள்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா