Saturday, November 28, 2009

தயிர் சாதம் - (Curd Rice)


தயிர் சாதம் தான் ரொம்ப லைட், வயிறு உபாதை, வாய் புண் இருந்தால் எல்லாவற்றிற்குமே ரொம்ப நல்லது.

தயிர் சாதம் ஈசி தான் எல்லோருக்கும் தெரிந்தது தான் இந்த முறையையும் டிரை பண்ணி பாருங்கள். இது புளிப்பில்லாதது எட்டு மாத குழந்தை முதல் வயதானவர்கள் வரை சாப்பிடலாம்.



அரிசி = ஒன்னறை கப்
புளிப்பில்லா தயிர் = அரை கப்
பால் = இரண்டு கப்
தாளிக்க‌
எண்ணை = இரண்டு தேக்கரண்டி
கடுகு = அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு = அரை தேக்கரண்டி
கடலை பருப்பு = ஒரு தேக்கரண்டி
முந்திரி = பொடியாக அரிந்தது ஒரு தேக்கரண்டி
பூண்டு = இரண்டு பல்
பெருங்காயப்பொடி = ஒரு சிட்டிக்கை
க‌ருவேப்பிலை = இர‌ண்டு ஆர்க்
உப்பு = தேவைக்கு
க‌டைசியாக‌ சேர்த்து கிள‌ற‌
ப‌ச்ச‌ மிள‌காய் = ஒன்று
இஞ்சி துருவ‌ல் = அரை தேக்க‌ர‌ண்டி
கொத்தும‌ல்லி த‌ழை = ஒரு தேக்க‌ர‌ண்டி
அல‌ங்க‌ரிக்க‌
காராபூந்தி (அ) கேர‌ட், வெள்ள‌ரி







சாதத்தை வடித்தோ (அ) குக்கரில் வைத்தோ வேகவைத்து கொள்ளவும். இது குழைவாக வடிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. சூட்டோடு மசித்து விட்டால் குழைந்த சாதம் போல் ஆகிவிடும்.

பாலை காய்ச்சி ஆறவைக்கவும்.

தாளிக்க‌ கொடுத்துள்ளவைகளை கருகாமல் தாளித்து உடனே தயிர் போட்டு கலக்கி, பாலையும் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடமால் அடுப்பை விட்டு இரக்கவும்.




மசித்த சாதத்தில் போட்டு நன்கு கிளறவும்.

கடைசியாக போட்டு கிளற கொடுத்த பொருட்களை போட்டு கிளறி காராபூந்தி தூவி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.

இல்லை துருவிய கேரட், பொடியாக அரிந்த வெள்ளரி சேர்த்தும் சாப்பிடலாம்.


8 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

மிக்க நன்றி சகோதரி இப்போ தேவையான ஒன்று

சீமான்கனி said...

ருசியான தயிர் சாதம் ..நல்லாக்கு அக்கா...

சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வு :-)

Malar Gandhi said...

Thayir saadham looks fabulous.

பித்தனின் வாக்கு said...

மிகவும் நல்லா இருக்கு. நான் தங்களுக்கு சிறு விருதினை தந்துள்ளேன், அதைப் பெற்று என்னைச் சிறப்பிக்கவும். நன்றி.

S.A. நவாஸுதீன் said...

5 நாள் லீவுல 3 நாள் இதுதான்.

Jaleela Kamal said...

நட்புடன் ஜமால் பெருநாளைக்கு பிறகு இப்படி லைட்டா சாப்பிட தான் இந்த குறிபபை போட்டேன்.
பதில் அளித்தமைக்கு மிக்க நன்றீ.


சீமான் கனி மிக்க நன்றி.


சிங்கக்குட்டி மறக்காமல் பதில் அளிப்பதற்கு மிக்க நன்றீ.

மலர் காந்தி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ

சுதாகர் சார் , மிக்க நன்றி நேரம் கிடைக்கும் போது வந்து பெற்று கொள்கிறேன்.விருது கொடுத்த‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி.


சகோதரர் நவாஸ் முன்று நாளும் இது தானா ம்ம் வயிறுக்கு ரொம்பவே இதம் தருமே.

Umm Mymoonah said...

Never used karaboondi for thayirsadam, I can sense that it must add real crispiness along with the curd. Thank you so much for linking this delicious rice with Any One Can Cook.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா