Friday, October 15, 2010

ஸ்வீட் & சோர் பாகற்காய் -


//பாகற்காய் என்றாலே கசப்பு தான் அந்த கசப்பு தன்மை இல்லாமல் சமைக்க இந்த முறையில் செய்யலாம். இது குழந்தைகளுக்கு வயிற்றில்
உள்ள பூச்சியை அழிக்கும். சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் நல்ல டிஷ். மிளகாய் தூளுக்கு பதிலாக ரெட் சில்லி சாஸ் சேர்த்தும் செய்யலாம்.//

தேவையானவை


பாகற்காய் - 200 கிராம்
வெங்காயம் - 50 கிராம்எண்ணெய் - மூன்று மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
வினிகர் - ஒரு தேக்கரண்டி
டொமேட்டோ கெட்சப் - இரண்டு மேசைக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டிசெய்முறை
பாகற்காயை வில்லைகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் நறுக்கின பாகற்காய் துண்டுகளை போட்டு ஒரு தேக்கரண்டி உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து இரண்டு மணி நேரம் ஊற
வைக்கவும்வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும்.


பாகற்காய் வில்லைகளை தண்ணீர் இல்லாமல் வடித்து இரண்டாக பிரித்து
வைத்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியாக போட்டு பொரிக்கவும்பொரித்த பாகற்காயை எண்ணெயை சுத்தமாக வடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும்.
பாகற்காய், அரை தேக்கரண்டி உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

பாகற்காயுடன் மசாலா சேர்ந்தவுடன் வினிகரை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு பிரட்டி விடவும்.
கடைசியில் டொமெட்டோ கெட்சப் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்ஏழுகறி சாம்பார்


I am sending these recipes to nithubala's vegetable marthon- bitter gourd event


23 கருத்துகள்:

Nithu Bala said...

superb recipe..using ketch up in a curry is very new to me..thanks for sending this to my event.

ஜெய்லானி said...

எலுமிச்சை சாதத்துக்கு நல்ல காம்பினேஷன் :-)

ஜெய்லானி said...

யக்கா..!! ச்சோர் பாவக்காய்ன்னா திருட்டு பாவக்காய்தானே ..!! ஹா..ஹா..

புதிய மனிதா. said...

nice tips...

asiya omar said...

அருமை.அட்டகாசமாக இருக்கு.நானும் சிம்பிளாக செய்து இருக்கிறேன்.இனி தான் அனுப்பனும்.

Chitra said...

கசப்பான பாகற்காயை வச்சு அசத்தி இருக்கீங்க.... ketchup use பண்ணியிருக்கிறது புதுசு.

kasthurirajam said...

Today i will try it.thanks 4 sharing.

சைவகொத்துப்பரோட்டா said...

எனக்கு ரொம்ப பிடிச்ச காய்களில் இதுவும் ஒன்று!

sweatha said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

நட்புடன் ஜமால் said...

பாகற்காய் ரொம்ப பிடிக்கும்

அதுவும் ஹைதை ஸ்டைல் ரொம்ப ரொம்ப

இனிப்பா சாப்பிடுவது இயலாதுங்கோ

Divya Vikram said...

Looks healthy and delicious.

ஸாதிகா said...

அட்டகாசம்.நேற்று ஆந்திரா மெஸ்ஸில் வெஜ் சாப்பாடு எடுக்க விட்டோம்.இதே போல் பாகற்காய் பொரியல் இனிப்பி,காரத்தொடு சுவையாக இருந்தது.இன்று உங்கள் வலைப்பூவிலும் போட்டு இருக்கின்றீர்கள்.நன்றி ஜலி.

Jaleela Kamal said...

ஆமாம் நீத்து பாகற்காய் பொரியல், பாகற்காய் பிட்லை, ஊறுகாய், கூட்டு என்று செய்வோம் , இது போல் செய்வது குழந்தைகளுக்கு சாப்பிட நல்ல இருக்கும்.

Jaleela Kamal said...

நன்றி ஜெய்லானி அடுத்த முறை எலுமிச்சை சாதத்துக்கு செய்துட வேண்டியது தான்

Jaleela Kamal said...

சோர் சோர் ஹி ஜெய்லானி நீங்க அப்படி சொல்றீங்கலா?

Jaleela Kamal said...

நன்றி புதிய மனிதா

நன்றி ஆசியா

ஆமாம் சித்ரா கசப்பு தன்மைக்காக கெட்சப்

நன்றி கஸ்தூரி ராஜம்

நன்றி சை.கொ.ப

நன்றி ஸ்வேதா

நன்றி ஜமால் அப்படி ஒன்றும் ரொம்ப இனிப்பாக இருகாது

வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க ந்னறி திவ்யா.

ஸாதிகா ஊருக்கு வந்தா உங்களிடம் எல்ல ரெஸ்டாரண்ட் பெயரையும் கேட்டு கொள்ளனும்.

Akila said...

Wow so lovely n yummy....
Event: Dish Name Starts with C
Learning-to-cook
Regards,
Akila

vanathy said...

super recipe, akka.

வெறும்பய said...

nalla recipe

Gani said...

Your receips are very good and tasty. I will pray for you.

Can u please tell how to make "VADA/ PRAWN VADAI" which is very popular in Adirampattinam and Kayalpattinam areas.

Jaleela Kamal said...

akila thanks for your comment,

Jaleela Kamal said...

நன்றி வானதி

நன்றி வெறும்பய

Jaleela Kamal said...

கனி உங்கள் முதல் வருகைக்க்கு மிக்க நன்றி.

இறால் வடை ரெசிபி வேண்டுமானால் போடுகிறேன்.

ஆனால் இறால் வாடா எனக்கு செய்ய தெரியாது, மலிக்கா அதிராமபட்டிணம் தான் லின்க் தரேன்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா