Thursday, October 21, 2010

பெண்கள் வீட்டில் தையல் துணிகளை கட்டிங் செய்யும் போது



துணிகளை ( சோளி மற்றும் சல்வார்) வெட்டும் போது கவனமாக உடனே அதை ஒரு துண்டு விடாமல் எடுத்து சுருட்டி அதன் செட்டுகளை ஒரு கவரில் போட்டு பத்திரமாக வையுங்கள். அங்கு இங்கு சிதர விட்டால் கை, பட்டி, கழுத்து துணி இதில் ஏதாவது ஒன்று காணாமல் போய் விடும்.


யாருடனும் சண்டை போட்டு விட்டு, பிள்ளைகளை திட்டி விட்டு துணிகளை வெட்டினால் உஷார் உடனே வெட்டிய துணியை பத்திரப்படுத்தவும்.இல்லை என்றால் எப்படியும் ஒரு கையோ, பட்டி துணியோ காணாமல் போகும், இல்லை உங்கள் மேல் கோபமாக இருப்பவர்கள் அதை கண்டமட்டுக்கும் எங்காவது வெட்டி விடுவார்கள்.





என‌க்கு என் த‌ங்கைக்கும் ஒன்றாக‌ க‌ல்யாண‌ம் ஆச்சு, எல்லா க‌ல்யாண‌ ச‌ட்டையும் ஆளுக்கு ஒரு ட‌ஜ‌ன் அவ‌ள் தான் தைத்தாள். நான் அத‌ற்கு கொக்கி தைப்ப‌து, ஹெம்மிங் செய்வ‌து அப்போது.நான் தையல் கிளாஸ் போகல, ந‌ல்ல‌ அழ‌கான‌ பொன் ம‌ஞ்ச‌ள் நிற‌ ச‌ட்டை ஹெம்மிங் ப‌ண்ணி முடித்த‌தை யாரோ கத்த்ரியால் க‌ட் ப‌ண்ணி விட்டார்க‌ள்.




ஆகையால் வீட்டில் தைப்ப‌வ‌ர்க‌ள், எல்லாவ‌ற்றிலும் க‌வ‌ன‌மாக‌வும் உஷாராக‌வும் தைக்க‌னும்.

அடுத்து முன்று வயதுக்குற்பட்ட குழந்தைகளை வைத்து கொண்டு தைக்காதீர்கள்.

நீங்கள் தைக்கும் போது ரொம்ப ஸ்வாரஸியமாக இருக்கும் அந்த நேரம் குழந்தை என்ன ஜோராக ஓடுகிறதே என்று கையை வைப்பார்கள்.

( இது போல் நான் தைக்கும் போது சின்ன‌ பைய‌ன் மிஷினில் உள்ள‌ ஊசியில் கையை விட்டு விட்டான். அப்படியே பகீர் என்றாகி விட்டது. அப்ப‌டியே க‌ட்டை விர‌லில் உள்ளே போய் விட்ட‌து. ந‌ல்ல‌ வேலை ச‌ட்டுன்னு அவ‌ன் கைய‌ எடுக்க‌ல‌ அப்ப‌டியே ச‌க்க‌ர‌த்தை பின்புற‌மாக‌ திருப்பி விரலை எடுக்க‌ வைத்தேன்).பகீர் என்று ஆகிவிட்து. அதிலிருந்து தைக்குக்கும் போது ரொம்ப‌ க‌வ‌ன‌மாக‌ யாரும் இல்லாத‌ நேர‌ம் அல்ல‌து எல்லோரும் துங்கிய‌ பிற‌கு தைப்ப‌து.






க‌த்திரி கோலையும் உட‌னே ப‌த்திர‌ ப‌டுத்த‌னும் இல்லை என்றால் அதை எடுத்து விளையாடு கிறேன் என்று முடியை க‌ட் ப‌ண்ணி கொள்வார்க‌ள். உடனே ஊசியால் குழந்தைகளின் கையை தைக்க வாய்பப்புகள் இருக்கிறது





நீங்களும் தைக்கும் போது திரும்பி பார்க்காதீர்கள், பேசி கொண்டே தைக்காதீர்கள். உங்கள் கையே போய் மாட்டிக்கொள்ளும்.
அது போல் இரண்டு பேர் தைக்கும் போது பேச்சு ஸ்வாரசியத்தில் பெருவிரலுல் மிஷினி ஊசி போய் மாட்டி கையுக்கு தையல் போட்டார்கள்.

அதே போல் கணவன் மனைவி இருவரும் டைலர். மனைவி வெட்டி கொடுப்பார் கணவன் கடையில் கொண்டுவந்து தைப்பார்.
ஒரு நாள் அப்பளம் பொரித்து விட்டு அந்த எண்ணைய கீழே வைத்து விட்டு , துணி வெட்ட ஆரம்பித்து இருக்கிறார், வீட்டில் இருந்த சின்ன குழந்தை கொதிக்கிற எண்னையில் கையை விட்டு விட்டது. சின்ன குழந்தைகள் உள்ள வீட்டில் தையலை வைத்து தான் பிழைப்பே என்றால் மிக கவனமாக தைக்க வேண்டும்.



18 கருத்துகள்:

எல் கே said...

நல்ல அறிவுரைகள்

சசிகுமார் said...

பயனுள்ள பதிவு அக்கா

Unknown said...

Thanks 4 sharing.As a beginner in tailoring ur tips r very useful for me.I got it at a correct time.

சாருஸ்ரீராஜ் said...

அசத்தலான டிப்ஸ் . சாதரணமா கத்திரிகோல் மறந்து வச்சுட்டா , பசங்க எடுத்து பேப்பர் கட் பண்ணிறேனு விளையாடுதுங்க நமக்கு தான் டென்சனா இருக்கு .

நிலாமதி said...

மிகவும் பயனுள்ள் முன் எச்சரிக்கை. எல்லோரும் வாசித்து பயன் பெற வேண்டும்.

சுந்தரா said...

அத்தனையும் கவனிக்கவேண்டிய விஷயங்கள்தான்...

நன்றி ஜலீலா!

Chitra said...

நல்ல அறிவுரையும் தகவலும். நன்றிங்க, அக்கா!

ஜெய்லானி said...

படிக்கும் போதே பயமா இருக்கு .. !! அதுவும் சின்ன பிள்ளையின் கை ஊசியினுல் மாட்டியது ....!நாம எவ்வளவு ஜாக்கிரதையா இருந்தாலும் இது மாதிரி ஏதாவது ஆகிவிடுகிறது..!

துணி போனால் போகட்டும் .உடல் நிலைதான் முக்கியம் ..

நல்ல எச்சரிக்கை பதிவு..!!

Anisha Yunus said...

என்ன ஜலீலாக்கா ஒரு தையல் பதிவையே டெர்ரர் பதிவா மாத்திட்டீங்க?? நல்ல வேளை, தையல் மெசின் இருந்தாலும் அதை நான் யூஸ் பண்றதே இல்ல...ஹிஹிஹி

சாந்தி மாரியப்பன் said...

பொதுவாகவே குழந்தைகள் இருக்குமிடத்தில் ஊசி, பட்டன் போன்ற ஆபத்தான பொருட்களையோ, கத்தரிக்கோல் போன்றவற்றையோ அவர்கள் கையில் எட்டுமாறு வைக்கக்கூடாது.

Malini's Signature said...

நல்ல குறிப்புகள் அக்கா ,எனக்கும் என் கல்லூரியில் ஊசி கையில் குத்தி ஒரு வாரம் மட்டம்....குழந்தைகளை வைத்து தைய்ப்பது சிரமம்+கவனம்.

இமா க்றிஸ் said...

நல்ல டிப்ஸ் ஜலீ.

//யாருடனும் சண்டை போட்டு விட்டு// இதற்கு ஆள் கூட வேண்டாம். ;)

ஒரு நத்தாருக்கு முதல் நாள், பாதி வேலையில் வெட்டி வைத்த ப்ளௌஸ் ஒரு கையைக் காணோம். இன்னொரு கை வெட்டி வேலையை முடித்தேன். காலையில் பார்த்தால் தென்னைமரத்தடியில் பஞ்சுமிட்டாய்க் குவியல் போல் கை, அதன் மேல் நாய்க்குட்டியர் தூங்கிக் கொண்டிருந்தார். ;)

ஸாதிகா said...

அருமையான தகவல்களை அள்ளிதந்திருக்கின்றீர்கள் ஜலி

Vijiskitchencreations said...

very useful tip jalee.

Jaleela Kamal said...

நன்றி எல்.கே

நன்றி சசி

கஸ்தூரி இந்த நேரம் உங்களுக்கு பயன் படுவது குறித்து சந்தோஷம்.

ஆமாம் சாரு நமக்கு தான் டென்ஷன். கத்தரி, கத்தியில் ரொம்ப உஷாராக இருப்பேன்.
இப்ப பெரியவர்கள் ஆகிவிட்டார்கள், கவலை இல்லை
வாங்க நிலாமதி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

சுந்தரா ஆமாம் பா எல்லோரும் கவனிக்க வேண்டிய விஷியம்.

ஆமாம் சித்ரா இது கண்டிப்பா எல்லோருக்கும் தெரிய வேண்டிய தகவல், நன்றி.

ஜெய்லானி நீங்கள் சொலவ்தும் சரியே
சில நேரம் நம்மை அறியாமல் நடபப்து இது போல விஷியங்கள்.
அதான் பதிவாக போட்டேன்.

அன்னு மிஷினே யுஸ் பன்றதில்லை, நலல் வேலை செய்தீர்கல்

அமைதிச்சாரல் . வருகைக்கு நன்றி,குழந்தைகல் இருக்கும் இடத்தில் எல்லா பொருட்களையுமே எட்டாத தூரத்தில் வைப்பது நலல்து.
சூடாஅன சாப்பாடு ஐட்டம், கத்திரி , வொயர் , மொபைல், அயர்ன் பாக்ஸ் போன்றவைகளை மிக கவனமாக வைக்கனும்.

Jaleela Kamal said...

ஹர்ஷினி காலேஜ் படிக்கும் போது கையில் ஊசி குத்தி விட்டதா?ரொம்ப கஷ்டமா இருந்திருக்குமே?
குழந்தைகள் இருக்கும் இடத்தில் மிக கவனம் தேவை/

இமா உஙக்ள் நாத்தனார் கை துணி தொலைந்து போனதும் , அதை நாய்குட்டியார் எடுத்து போய் அதன் மேல் படுத்ததும் வேடிக்கை.. யா இர்க்கு
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஸாதிகா அக்கா

நன்றி விஜி , எபப்டி இருக்கீங்க.

இமா க்றிஸ் said...

சாரி ஜலீலா. ;) எங்க பக்கம் நோ நாத்தனார். ஒன்லி 'மச்சாள்'

அது 'நத்தார்' தான். //ஒரு நத்தாருக்கு முதல் நாள்// = டிசெம்பர் 24ம் தேதி = க்றிஸ்மஸுகுக்கு முன் தினம். ;))

Jaleela Kamal said...

நன்றி அகிலா

இமா கண்டு கொன்டேன் நான் தான் , ந‌த்தார் ர நாத்தனார் என்று படித்து வ்ட்டேன்.
நன்றி இமா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா