Saturday, May 29, 2010

ஹமூஸ் - hummus

அரபிகளின் உணவு களில் இந்த குபூஸ் மற்றும் சிக்கன்,பிலாபிலுக்கு இந்த ஹமூஸ் இல்லாமல் இருக்காது.

இது பல சுவைகளில் தயாரிக்கலாம்.

அதில் சுலபமுறை இது
தேவையானவை
கொண்டை கடலை - 100 கிராம் (அரை டம்ளர்)
பூண்டு - இரண்டு பல்
லெமன் - ஒன்று
(தஹினா) வெள்ளை எள் - முன்று தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
வெள்ளை மிளகு தூள் - கால் தேக்கரண்டி
பப்பரிக்கா பவுடர் -சிறிது
ஆலிவ் ஆயில் - முன்று மேசை கரண்டி
செய்முறை
1.கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து .வேகவைத்து கொள்ளவும்.
2.வெந்த கொண்டைகடலையை ஆறியதும் பூண்டு, வெள்ளை எள் எலுமிச்சை சாறு உப்பு தேவையான அளவு தண்ணீர் ( கடலை வெந்த தண்ணீரே கூட பயன் படுத்தலாம்) சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

3.ரொம்ப கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

4. கடைசியாக ஆலிவ் ஆயில் கலந்து
பப்பரிக்கா பவுடர் கொண்டு அலங்கரிக்கவும்
5. சுவையான ஹமூஸ் ரெடி




குறிப்பு

1.இது நம் சுவைக்கேற்ப தயாரிக்கலாம், ஆனால் கலர் தான் சிறிது வித்தியாசப்படும்.

2. வெள்ளை மிளகு இல்லை என்றால் சிறிது மிளகாய் தூள், (அ) கருப்பு மிளகும் சேர்த்து கொள்ளலாம்.

3. இதையே சிறிது தயிர் வெங்காயம் சேர்த்து கொஞ்சம் நீர்க்க அரைத்தால் பிலாபில் சாண்ட்விச், சவர்மா சாண்ட்விச்சுக்கு பயன் படுத்தும் சாஸ் ஆகவும் பயன் படுத்தலாம்.

4. கைபடாமல் பிரிட்ஜில் வைத்து என்றால் நான்கு நாட்கள் பயன் படுத்தலாம்.

5. அடிக்கடி ஹமூஸ் சாப்பிடுபவர்கள் எள் பேஸ்ட் தனியாகவே விற்கிறது கடைகளில் அதை வாஙகி வைத்து சுலபமாக பூண்டு பொடி சேர்த்தும் தயாரிக்கலாம்.

6. வெளிநாடுகளில் கொண்டைகடலை கூட டின்னில் ரெடி மேட் கிடைக்கிறது. நான் இதில் எல்லாமே பிரெஷ் தான் பயன் படுத்தி உள்ளேன்.
7. புளிப்பு சுவை அதிகம் விரும்பதவர்கள் அரை பழம் பிழிந்து கொண்டால் போதுமானது.

8. இது குபூஸுக்கு என்றில்லை சப்பாத்தி ரொட்டி பூரிக்கும் தொட்டு சாப்பிட நல்ல இருக்கும்.


டிஸ்கி:எல்லோரும் பதிவ படிக்க முடியல என்று சொன்னதால் இப்போதைக்கு சிம்பிளாக ஒரு டெம்ளேட் போட்டு உள்ளேன், இப்ப பிளாக்

Thursday, May 27, 2010

சர்க்கரை வியாதிக்கு அருமையான உணவு பர்கல்



பர்கல் அப்படின்னா என்ன?burgal
அம்மு ஒரு ரெசிபி போட்டு இருந்தாங்க பல்கர் உப்புமா
இத படிக்கும் போது சில பேருக்கு நகைச்சுவையாகவும் இருந்த்து அங்கு கமெண்ட் படிக்கும் தெரிந்து கொண்டேன், ரொம்ப அருமையான சத்துணவு தான் பல்கர்.

இது நான் எப்ப பார்த்து இருக்கேன்னா 7 வகுப்பு படித்த போது, பள்ளியில் சாப்பிடும் ஏழை பிள்ளைகளுக்கு சாப்பாடு போடுவார்கள். அப்ப பின்வாசல் பக்கம் கிச்சன் இருக்கும் அங்கு இந்த பல்கரை கல்லு பார்த்து கொண்டு இருப்பார்கள்.
அப்படிக்கா போகும் போது ஒரு குத்து அள்ளி கொள்வேன். எனக்கு அதை சும்மா எடுத்து சாப்பிட ரொம்ப்பிடிக்கும். மொத்தமா விறகு மூட்டி பெரிய சட்டியில் போட்டு கிளறுவார்கள்.ஆனால் பிள்ளைகளுக்கு பிடிக்காது. களி மாதிரி கிளறி கொடுப்பார்கள்.

அதற்கு பிறகு அந்த பல்கரை பார்க்கல, வீட்டில் எல்லாம் அது வாங்க மாட்டார்கள். இங்கு துபாய் வந்த்தும் கேரி போரில் இருந்த்து உடனே ஒரு பாக்கெட் வாங்கி கொண்டேன்.

இதை அரிசி சமையல் போலவே எல்லா வகையான சமையலும் சமைக்கலாம்.

இது வரை நான் சமைத்த்து, நோன்பு கஞ்சி,இனிப்பு புட்டு, கொழுக்கட்டை, உப்புமா.

இது டயபட்டீஸ் கார்ர்களுக்கு ஒரு அருமையான உணவு, அவர்கள் வேண்டிய உணவை இதில் தயாரித்து சாப்பிடலாம்.
ஆனால் இந்த பர்கலில் பொங்கல், ரொட்டி , கீமா உப்புமா, சிக்கன் உப்புமா , பிரியாணி , பிஸிபேளா பாத், லோ பேட் தயிரில் தயிர் சாதம் போன்றைவையும் செய்யலாம். அரிசி சாப்பாடு சாப்பிட்டவர்களுக்கு இது அவ்வளவா பிடிக்காது.இதை பாயாசம் போலும் செய்யலாம்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதை வாங்கி இஷ்டம் போல சமைத்து சாப்பிடுங்கள்.

டயட்டில் உள்ளவர்களும் செய்து சாப்பிடலாம்.

இது ஆசியாவின் பொங்கல்




இது அம்முவின் உப்மா




பல்கர் உப்மா - அம்முவின் உப்மா

கீதா ஆச்சல் உப்புமா

பொங்கல் ஆசியா

இப்படி நிறைய வித விதமான உணவுகள் இந்த பர்கலில் தயாரிக்கலாம்/

Monday, May 24, 2010

பிஸ்தா ஐஸ்கிரீம் வித் மெலன் ஜூஸ் - pista ice cream with melen juice



தேவையானவை

கிரினி பழம் (ஸ்வீட் மெலன்) - சிறிய பழம் ஒன்று
பிஸ்தா ஐஸ்கிரீம் - முன்று பெரிய கரண்டி (அ) ஒரு கப்
சர்க்கரை - சிறிது
ஐஸ் கட்டிகள் - 10
உப்பு - அரை சிட்டிக்கை



செய்முறை


கிர்னி பழத்தை (ஸ்வீட் மெலன்) தோலை நீக்கி இரண்டாக அரியவும்.
உள்ளே உள்ள கொட்டைகளை சிறிது பழத்தோடு ஸ்பூன் கொண்டு வழித்தெடுக்கவும்.
கொட்டைய மட்டும் நீக்கி விட்டு அரிந்தால் சில பழங்கள் கசக்கும்.
பிறகு பொடியாக அரிந்து கொள்ளவும்.
மிக்சியில் அரிந்த பழம்,ஐஸ் கட்டிகள், பிஸ்தா ஐஸ் கிரீம் சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும்.



சுவையான பிஸ்தா மெலன் ஜூஸ் ரெடி.
குறிப்பு:

இதை பாலுடன் சேர்த்து தான் ஜூஸ் தயாரிப்பார்கள். ரொம்ப அருமையாக இருக்கும்.
மற்ற பழங்களுடன் சேர்த்து காக்டெயில் ஜூஸ் போலவும் தயாரிக்கலாம்.வெரும பழத்தை கட் செய்து சாப்பிட்டாலும் நல்ல இருக்கும்.
இது இங்குள்ள ஹாஸ்பிட்டலில் மதிய உணவிற்கு குழந்தை பெற்ற வர்களுக்கு மீல்ஸுடன் இந்த பழம் ஒரு துண்டும் வைப்பார்கள்.
கிர்னி பழம் வாங்கி வந்து வைத்தாலே அந்த இடம் முழுவதும் மணமாக இருக்கும். முன்று டம்ளர் அளவிற்கு வரும்.
ரொம்ப திக்காக இருந்தால் சிறிது தண்ணீய சேர்த்து அடித்து கொள்ளவும்.(அமைச்சரே எந்த தண்ணியன்னு கேட்ககூடாது)
கோடையின் வெப்பத்துக்கு அன்றாட உணவில் இது ஜூஸ்வகைகள் குடிப்பது நல்லது.

Sunday, May 23, 2010

எதுவும் நம் கையில் இல்லை

நேற்று நடந்த விமான விபத்து ரொம்பவே மனதை பாதித்து விட்டது.எனக்கு மட்டும் அல்ல இந்த செய்திய கேட்ட அனைவருக்கும். ஒரு அதிர்ச்சி தான்.
நேற்று முழுவது ஒன்றுமே ஓடல,மனசும் சரியில்லை.
இதில் கேரி போரில் வேலை பார்க்கும்,ஒரு கவுண்டர் சேல்ஸ்மேன் லீவே தர மாட்டேன் என்று சொன்ன மேலாளரிடம் ரொம்ப வாதாடி லீவு கேட்டு ஊருக்கு சென்றாராம், இப்ப அவரும் இல்லை.
புஜேரா ஹாஸ்பிட்டலில் உள்ள டாக்டர் தம்பதிகள் அவர்களும் இந்த விபத்தில். என்னத்த சொல்வது. ஹர்ஷினி இங்கு எங்க பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் , பெண்கள் படித்த பெண்ணாம்.இதை பற்றி சுந்தரா போட்டு இருகிறார்கள். இங்கு சென்று படிக்கவும். இன்னும் பல நம் மக்கள்.
நேற்று இரவு ஏர்போட்டில் காத்திருந்த போது காலை நடந்த விபத்தில் மடிந்தவர்க்ளை பற்றியே மனம் நினைத்தது. ரொம்ப வேதனையா இருந்தது. என்னால் பதிவு போட கூட முடியல.

நேற்று காலை தான் என் பையனும் ஊரிலிருந்து கிளம்பினான், இரவு அவன் வந்து சேரும் வரை மனம் படப்படப்பாவே இருந்தது.பையன் நல்ல படியாக வந்து சேர்ந்தான்.

இன்று நாம் இருக்கிறோம், நாளை என்ன நடக்கபோகுது என்பதை இறைவன் தான் அறிவான், எதுவும் நம் கையில் இல்லை, அவன் அன்று ஒரு அனுவும் அசையாது.

என்றும் பிரத்தனையோடு ஏக வல்ல இறைவனை வேண்டுவோம்.
என் பசங்க,வெளியில் கிளம்பும் போது அடிக்கடி சொல்வேன்,
அல்லாவுடைய காவல் சொல்லிட்டுபோமா, ஆயர்த்தில் குர்ஸி ஓதிட்டு போமா என்பேன்/
இந்த துஆவை அடிக்கடி ஓதிக்கொள்ளுங்கள்/
"யா அல்லாஹ்!உய‌ர‌த்திலிருந்து கீழே விழுந்தோ, இடிந்து விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ இற‌ப்ப‌தை விட்டும், ம‌ர‌ண‌ நேர‌த்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவ‌தை விட்டும் உன்னுடைய‌ பாதையில் (போர் செய்யும் போது) புற‌முதுகு காட்டி ஓடி இற‌ப‌ப்தை விட்டும் நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்."

Friday, May 21, 2010

தக்காளி பருப்பு ரசம் - tomato dal rasam




தேவையான‌வை




புளி = நெல்லிக்காய் அளவு
தக்காளி = இரண்டு
துவரம் பருப்பு வெந்ததது = கால் கப்
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு


ஹொம் மேட் ரசப்பொடி(அ) ரெடி மேட் ரசப்பொடி = இரண்டு தேக்கரண்டி

தாளிக்க‌


நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி
எண்ணை = அரை தேக்கர‌ண்டி
க‌டுகு = ஒரு தேக்க‌ர‌ண்டி
பெருங்காய‌ப்பொடி = கால் தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = இர‌ண்டு ஆர்க்
பூண்டு = இர‌ண்டு ப‌ல்
கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது


செய்முறை



1. ஒன்னறை தக்காளியை கைகளால் பிசைந்து அத்துடன் புளியை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து மஞ்சள் தூள், உப்பு தூள், ரசப்பொடி, அரை பழத்தை அப்படியே முழுசாக சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

2. பிறகு வெந்து வைத்துள்ள பருப்பை நன்கு மசித்து சேர்த்து தேவைக்கு மேலும் முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு இரக்கவும்.



3.கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள்வைகளை தாளித்து சேர்த்து கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.




4. ரொம்ப அருமையாக நெய் மனத்துடன் அப்படியே ஊற்றி குடிக்கலாம் போல இருக்கும்.
குறிப்பு:
இதில் தக்காளி பழத்தை ரசத்தில் இருந்து எடுத்து சாப்பிடுபவர்கள், முழு தக்காளி பழத்தை கூட நாலாக அரிந்து சேர்த்து கொதிக்க வைக்கலாம்.
தக்காளி பழம் வெந்து எடுத்து சாப்பிட நல்ல இருக்கும்.

Wednesday, May 19, 2010

ஒரு வயது குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சனையா?


குழந்தை வளர்பு பதிவு போட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது.

ஆமினாவின் ஒரு வயது குழந்தைக்கு மோஷன் போவது ரொம்ப சிரமமாக இருக்கு போன பதிவில் கேட்டு இருந்தார்கள்.

இதற்கு முக்கிய காரணம் நீங்கள் கொடுக்கும் உணவு முறைதான்.
எடுத்ததும் ஆப்பிலும் கேரட்டும் தான் வேக வைத்து கொடுப்போம்.
இது போல் நம்பர் 2 போக கழ்டபடும் குழந்தைகளுக்கு ஆப்பில் கேரடை கொஞ்சமாக கொடுப்பது நல்லது. ஆப்பிலும் கேரட்டும் மோஷன் அதிகமாக போவதை கட்டுப்படுத்தும்.

குழந்தைகளுக்கு திட உணவு ஆரம்பித்ததும். அடிக்கடி தண்ணீர் அதிகமாக குடிக்க கொடுக்கனும்.
ரொம்ப கழ்டபடும் குழந்தைகளுக்கு ஹார்டாக கடித்து முழுங்கும் உணவுகளை தவிர்க்கவும்.
முதலில் வாழை பழம் சாப்பிட பழக்குங்கள். இல்லை வாழைபழத்தை ஹல்வா போல் (அ) மில்க் ஷேக் போன்று தேங்காய் பால் சேர்த்து மிக்சியில் அடித்து கொடுக்கவும்.
இதை தேங்காய் பாலில் தான் தயாரிக்கனும் என்றில்லை காய்ச்சி ஆறிய பாலில் செய்தாலும் நல்ல இருக்கும்.
பால் பழம், வாழை சேர்த்த மில்க் ஷேக்குகள் செய்த்தும் உடனே குடிக்கனும் இல்லை என்றால் கருத்து போய்விடும். வெயில் காலஙகளில் ஐஸ் கியிப்ஸ் சேர்த்தும் தயாரிக்கலாம்

பால் சாப்பாடு சாப்பிடும் குழந்தைய இருந்தால் பால் வாழைப்பழம் சிறிது சர்க்கரை சேர்ர்த்து பிசைந்து ஊட்டி விடவும்.
ராகி ( கேழ்வரகு) கூழகவோ (அ) பானமாகவோ தயாரித்து கொடுக்கவும்.இந்த உணவும் குழந்தைகள் மோஷன் பிரியாக உதவும். ராகி பானம் இங்கு குறிப்பிலேயே இருக்கு.

ஆரஞ்சும் பாலும் சேர்த்து ஜூஸாக அல்லது சுளைகளாக பிரித்து அதில் லேசாக சர்க்கரை தூவி கொடுக்கலாம்.
இப்படி கழ்டபடும் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட முடியாமல், குமட்டி கொண்டு வரும்.

எப்போதும் காய்ச்சி ஆறிய வெண்ணீரை அடிக்கடி கொடுத்து கொண்டே இருக்கவும்.

விளக்கெண்ணை வயிற்றில் சர்குலர் மூமெண்டில் நன்கு தேய்த்து விட்டு வெண்ணீர் அருந்த கொடுக்கவும்.
விளக்கெண்ணைய வெரும் வயிற்றில் குடிக்க கொடுத்தாலும் ஃபிரியாக ஆகும்.குழந்தைகளுக்கு மோஷன் போகும் இட்த்திலும் கொஞ்சம் தடவி விடனும்
ரெயிஸின்ஸ் (கிஸ்மிஸ் பழம்) பழத்தை நன்கு தண்ணீரில் ஊறவைத்து ஜூஸாக அடித்து கொடுத்தால் உடனே மோஷம் ஆகும் (இது மனோ அக்கா சொன்னது, நானும் நிறைய டிப்ஸில் சொல்லி இருக்கேன், இது தினம் இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை பிழிந்து குடித்தால் அடிக்கடி ஏற்படும் சளித்தொல்லையும் கட்டு படும்

ரசம் சாதம் குழைவாக, பருப்பு கீரை கடைசல், வெள்ளை வாயு கஞ்சி போன்றவை கொடுக்கவும். ரசத்தில் இஞ்சி ரசம் செய்து குழைவாக சாதத்தில் போட்டு பிசைந்து ஊட்டி விடவும்.
சோம்பை கருகாமல் வருத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட்டு கால் டம்ளராக்கி குடிக்க கொடுக்கவும்.
புரூன்ஸ் பழம், அத்தி பழம் இதையும் தொடர்ந்து கொடுக்கலாம்.
மெயினாக நிறைய பழம் காக்டெயில் ஜூஸ் வகைகள் அதிகமாக கொடுக்கவும், மாம்பழ சீசனில் தேங்காய் பாலுடன் மாம்பழ மில்க் ஷேக்கும் கொடுக்கலாம்.


வாழை தேங்காய் மில்க் ஷேக்

தேவையானவை


வாழைபழம் = ஒன்று
தேங்காய் பால் - ஒரு கப்
வென்னிலா ஐஸ் கிரீம் - ஒரு குழிகரண்டி அளவு.
சர்க்கரை - தேவைக்கு

செய்முறை


வாழை பழத்தை பொடியாக அரிந்து அதில் தேங்காய் பால் ஐஸ் கிரீம் சர்க்கரை சேர்ர்த்து மிக்சியில் நுரை பொங்க அடித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

அதே போல ஒரு நல்ல விஷேசம் என்றால் ,பொண்ணு மாப்பிள்ளைகளுக்கு கொடுக்கும் பாலும் பழமும் கூட கரைத்தும் கொடுக்கலாம்.


இன்னும் வேறு ஏதும் டிப்ஸ்கள் ஞாபகத்துக்கு வந்தால் போடுகிறேன்.
ஏற்கனவே இதற்குண்டான பதிவு போட்டு இருக்கேன். இன்னும் கூடுதல் டிப்ஸ் இதில் போட்டுள்ளேன்.


இது எல்லா வயதினர்களுக்கும் பொருந்தும். எல்லா வயது குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் பொருந்தும்

Sunday, May 16, 2010

பிரட் ஹல்வா - bread halva





தேவையான பொருட்கள்

பிரெட் பாக்கெட் – 1 சிறிய பாக்கெட்
பால் – 4 டம்ளர்
இது பால் பவுடர் கரைத்து காய்ச்சி செய்தது.
நெய் – 50 கிராம்
டால்டா – பிரெட் பொரிக்க தேவையான அளவு
பாதம் – 50 கிராம்
முந்திரி – 50 கிராம்
கிஸ்மிஸ் – சிறிது
ஏலக்காய் – 2
ரெட் கலர் பொடி – சிறிது
ஸ்வீட்ன கண்டென்ஸ்ட் மில்க் – சிறிய டின்

சர்க்கரை – 200 கிராம்



செய்முறை




தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
பாலில் ஏலம் சேர்த்து கால் பாகம் வற்றும் அளவிற்கு காய்ச்சவும்






பிரெட்டை டால்டாவில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
எல்லா பிரெட்டையும் பொரித்து எடுக்கவும்





பாலில் பாதம் முழுவதும் + சிறிது முந்திரியை ஒன்றூம் பாதியுமாக பொடித்து சேர்க்கவும்.








பாலில் பொரித்து வைத்துள்ள பிரெட்டை உதிர்த்து சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி பிறகு சர்க்கரையையும் போட்டு நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.








கடைசியாக ஸ்வீட்ன் கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும்








இடையில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு, கலர் பொடியை கரைத்து சேர்த்து ஹல்வா பத்த்தில் கிளறவும்








கடைசியாக முந்திரியை பொடியாக அரிந்து , ரெயிஸின்ஸுடன் நெயில் வறுத்து சேர்க்கவும்












சுவையான பிரெட் ஹல்வா ரெடி.





குறிப்பு:
கொஞ்சம் தளர்வாக கிளறினால் தான் நல்ல இருக்கும் ரொம்ப ரிச் ஸ்வீட்.
இன்னும் ஒன்று பாதத்தை முதலே பாலில் சேர்த்து கிளறுவதை விட கடைசியாக சேர்த்து கிளறினாலும் நரு நருன்னு நல்ல இருக்கும்.
பிரெட்டை மொருகலாக பொரித்ததும் தூளாக்காமல் வேண்டிய வடிவில் கட் செய்து ஒரு வாயகன்ற த்ட்டில் பரத்தி சுகர் சிரப்பில் போட்டு, அப்படியே மேலேயே காய்ச்சி ஊற்றி நட்ஸ்களை பொரித்து சேர்த்தால் ஹைத்ராபாத்தில் செய்யும் டபுள் கா மீட்டா ரெடி.


டிஸ்கி: இது பிரியாணி நாஸியா செய்ய சொல்லி கேட்டாங்க.
கேட்டு ரொம்ப மாதம் ஆகுது , அதை இப்ப தான் செய்ய முடிந்தது.



Friday, May 14, 2010

ஆம்பூர் மட்டன் பிரியாணியும் தேங்காய் தயிர் சட்னியும்


ஆம்பூர் மட்டன் பிரியாணி


சாதரணமாக வடித்து செய்யும் பிரியாணிக்கும் ஆம்பூர் பிரியாணிக்கு வித்தியாசம் இருக்கு. இது ரோட்டோர கடைகளில் பார்சல் பிரியாணிபோல் போடுவார்க்ள், மொத்தமா நிறைய வடித்து தட்ட முடியாது அதற்கு இது போல் வேகவைத்து தண்ணீர் அளந்து ஊற்றுவதால் ஈசியாக செய்து விடலாம்.





பேச்சுலர்களும் ஈசியாக செய்துடலாம்.




தேவையானவை

தரமான பாசுமதி அரிசி - ஒரு கிலோ
மட்டன் ஒரு கிலோ
வெங்காயம் - அரை கிலோ
பழுத்த தக்காளி - அரைகிலோ
பழுத்த ரெட் பச்ச மிளகாய் - ஆறு
காஷ்மீரிசில்லி (அ) மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
கொத்துமல்லி தழை
புதினா
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
பிரியாணி இலை -இரண்டு
உப்பு தூள் - தேவைக்கு (சுமார் ஆறு தேக்கரண்டி)
எண்ணை - 200 மில்லி
நெய் - 50 மில்லி
லெமன் -அரைபழம்






செய்முறை

1. அரிசியை லேசாக களைந்து ஊறவைக்கவும்.

2. மட்டனை கொழுப்பெடுத்து 5 முறை கழுவி தண்ணீரை வடிக்கவும்.

3. வாயகன்ற பாத்திரத்த காய வைத்து அதில் பட்டை ,ஏலம், கிராம்பு , பிரியாணி இலை போட்டு வெடியவிட்டு வெங்கயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.

4. வதக்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.


5. பிறகு புதினா, தயிர் சேர்க்கவும், அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்கவும்.

6. அடுத்து உப்பு,மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து மட்டனை வேக விடவும்.

7. மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வந்ததும்

8. மட்டன் கூட்டு அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தார் போல் தண்ணீர் ஊற்றவும்.
9. ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.
தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிடவும்.
10 முக்கால் பதம் வெந்ததும் கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து ,பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.



சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.













தேங்காய் தயிர் சட்னி





இதற்குதொட்டு கொள்ள இஸ்லாமிய இல்ல திருமனங்களில் முன்பு செய்யும் தேஙகாய் தயிர் பச்சடி செய்துள்ளேன்.


தயிர் - ஒரு கப்
தேங்காய் துருவல் - கால் கப்
பொட்டு கடலை - ஒன்றும் பாதியுமாய் பொடித்தது இரண்டு மேசை கரண்டி
உப்பு சிறிது
பச்சமிளகாய் - இரண்டு( பொடியாக அரிந்தது)
வெங்காயம் - பெரியது ஒன்று (பொடியாக அரிந்தது)
கொத்து மல்லி தழை - சிறிது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.








டிஸ்கி: மகளிர் தினம் அன்று மண் சோறு செய்து அதில் ஒளித்து வைத்திருந்த முட்டை அதிராவிற்கு கிடைக்காமல் போகவே, ஆம்பூர் பிரியாணிக்குள் ஒளித்து வைத்துள்ள முட்டையை அதிராவிற்கு மட்டும் கொடுக்கிறேன்.

முதலில் இந்த பிரியாணிய செய்து சாப்பிடுங்கள், அடுத்து பிரெட் ஹல்வா போடுகிறேன்.









Wednesday, May 12, 2010

துபாயில் பேச்சுலர்களின் வாழ்க்கை பாகம்-2

வாங்க எல்லோரும், இந்தங்க பிடிங்க இந்த பூங்கொத்தை ,


எடுத்துக்கங்க இந்த பிரெட் ஹல்வாவை.ஏன்ன்னு கேட்கிறீங்களா?

இதன் செய்முறையை பிறகு போடுகிறேன்.



இது என் 400 வது பதிவு. இது வரை ஆதரவு த்ந்துபதிவுகளுக்கு தவறாமல் பதில் அளித்து ஓட்டு போட்டு ஊக்கமளித்து கொண்டு இருக்கும் அனைத்து பதிவாளர்களுக்கும் மிக்க நன்றி, இன்னும் எனக்கு ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன்.
















துபாயில் பேச்சுலர்களின் வாழ்க்கை பாகம் - 2

பேச்சுலர் வாழ்க்கைய பற்றி ஏற்கனவே பாகம் - 1 எழுதி இருந்தேன்.அதை இங்கு சென்று படித்து கொள்ளலாம்.




ஒரு ரூமில் எட்டு பத்து பேர் தங்கி இருக்கும் அறையில் எல்லோருக்கும் பெட்ட்டு போட இடம் இருக்காது, ஆகையா பங்க் பெட்டு போட்டு கொள்வார்கள், பங்க் பெட் என்றால் இரண்டு அடுக்கு இருப்பது போல் பெட். அப்படி பங்க் பெட்டில் கீழே படுப்பவகளுக்கு பிரச்சனை இல்லை மேலே படுப்பவர்கள் தான் பிரச்சனை, ரொம்ப ஜாக்கிரதையாக படுக்கனும், தூக்கத்தில் இரவில் டாய்லெட் போக இரங்கும் போது பார்த்து இரங்கனும். தூக்க கலக்கத்தில் கவனிக்காமல் எழுந்து மேலே பேன் ஓடி கொண்டிருக்கும். தெரியமகைய, தலைய நீட்டிடாதீங்க இப்படி தான் ஒருவருக்கு தலையில் பேன் அடித்து 8 தையல் சமீபத்தில் போட்டு இருக்கிறார்.









Executive பேச்சுலர்களுக்கு பிரச்சனை இல்லை ஒரு அறையில் இரண்டு பேர் தான் தங்குவார்கள். வசதிகளும் அதிகமாக இருக்கும்.




அனைத்து பேச்சுலர்களும் வாரம் ஒரு முறை கிடைக்கும் லீவில் டேரா பஜாரில் , பர்துபாய் , கராமா ஏரியாக்களில் வியாழன் இரவும், வெள்ளியும் பேச்சுலர்கள் கூட்டம் கூட்டமாய் நின்று சொந்தங்களை சந்திப்பதும், கடிதஙக்ளை பகிர்ந்து கொள்வதும், மனைவி , பிள்ளைகள், உம்மா , அக்கா தங்கைகளுக்கு துணிமனிகள் வாங்குவதற்காகவும் பஜாரில் கூடுவார்கள், தப்பி தவறி பேமிலியுடன் போய் விட்டால் ஒரு சந்துக்கூட ஃபிரியாக இருக்காது ஜே ஜேன்னு இருக்கும்.
ஊருக்கு போக சாமான்கள் வாங்க எல்லாம் ஒன்று கூடி போவதும்.
பிரண்டு வாங்கினானேன்னு கூட போனவர்களும் சேர்ந்து பர்சேஸ், பர்ஸ் காலி.
ஒரு நபருக்கு 30 கிலோ தான் எடுத்து செல்ல அனுமதி, கையில் 7 கிலோ
ஷாப்பிங் பண்ணி கொடுக்கிற பிரண்டுமார்களும் அவர் வாங்குவது போல வே வாங்கி செல்பவர் தலையில் கட்டுவார்கள். இப்படி ஒரு ஆள் என்றால் பரவாயில்லை, ஊர்கார்கள், ஆளுக்கொன்று, அவஙக் அவங்க பிள்லைகளுக்கு டய்ஸ், மனைவிக்கு புடவை, நன்பர்களுக்கு செண்ட், மொபைல் என்று , போய் ரூமுக்கு போய் பேக்கிங் ஆரம்பிப்பார், வைகக் வைக்க பெட்டியில் மற்றவர்கள் பொருளே நிறைந்துவிடும், தன் பொருளை வைக்க முடியாமல் பேந்த பேந்த முழித்து கொண்டு பேக்கிங்கை மாற்றி மாற்றி கட்டி இவர்கள் சாமனை பாதி பிரித்து எடுத்து காசு கொடுத்து பார்சலில் போடுவார்கள்.


சரி பேக் பண்ணியாச்சேன்னு நிம்மதியா இருந்தால், அப்ப தான் கிள்ம்பும் போது மச்சான் எப்படியாவது இந்த் பார்சல உள்ள வச்சுக்கோன்னு ஒரு அரை கிலோ வரும், அடுத்து வழி அனுப்ப வரும் நபர் மாப்ளே டூட்டி ஃபிரியில சாமான் வாங்கும் போது எனக்கு ஒரு அரை கிலோ பாதம், என் பிரெண்டுக்கு ஒரு சிக்ரேட் பாக்கெட் வாங்கிட்டு போய்விடு என்று சொல்வார்கள்.

ஊருக்கு போய் சாமான்களை நண்பர்கள் வீட்டுக்கு போய் கொடுக்க சென்றால் உடனே எப்ப கிளம்புவீங்க. போன ஆள் டென்ஷன் ஆகிடுவார் இப்ப தாஙக் வந்து இருக்கேன். இல்ல்லங்க திருப்பி இங்கிருந்து சாமான் கொடுத்தனுப்ப தான் கேட்கிறேன் என்பார்கள்.

கஷ்டபட்டு சம்பாதித்து ஊருக்கும் போய் வருவது நண்பர்களுக்க்காவே போல் இருக்கும், உதவி செய்யும் நண்பனுக்கு செய்ய வேண்டியது தான் . அதுக்குன்னு ஓவரா ஒருத்தரை போட்டு தாளிப்பது சரியில்லை.

அதிலும் சில பேர் ரொம்ப உஷாரு, ஏற்போட்டில் நின்று கொண்டு மச்சான் இப்ப தான் திடீருன்னு முடிவெடுத்தேன் ஊருக்கு போறேன் மச்சான் என்பார்கள்.இப்படி சொல்லி பிழைத்துக்கொள்பவர்களும் உண்டு.

இது போல் இதுவரை கொடுத்திருந்தால் இனிமேலாவது, கொஞ்சம் அதை மாற்றி கொள்ளுங்கள். மீதியை நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்

பேச்சுலர் சமையலும் ஊருக்கு போதலும்
இதையும் படிங்க. (கண்ணாவின் இடுகை)

இன்னும் பல பகிர்வுகள் நேரம் கிடைக்கும் போது போடுகிறேன். பேச்சுலர்கள் படங்கள் கூகிலில் இருந்து எடுத்தது. இப்ப பதிவு போட நேரம் இல்லை, இந்த பதிவு முன்பே எழுதிவைத்தது.

எல்லோருக்கும் மீண்டும் நன்றி.

http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp

போன மாதம் நான் போட்ட பதிவு பருவமே 16 குட்பிளாக்கில் வ்ந்துள்ளது, இரண்டு நாள் முன் தேனக்கா பதிவுக்கு பின்னூட்டம் போடும் போது குட் பிளாக்கில் அவஙக் கவிதை வந்துள்ளதை பார்க்கும் போது தான் தெரிந்தது.

400 வது பதிவு,

யுத் ஃபுல் விகடனுக்கு நன்றி.



Sunday, May 9, 2010

துபாயில் மெட்ரோ டிரெயினில் சல்மான் கான்

துபாய் மெட்ரோவை சும்மா போடுவதை விட இப்படி போட்டா பார்க்க நல்லாதானே இருக்கும்











































Saturday, May 8, 2010

பாயா குருமா, வட்லாப்பம்


எல்லோருக்கும்உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும். அன்னையர் தின வாழ்த்துக்கள்.

இது என் அம்மாவின் ஸ்பெஷல் முட்டை வட்லாப்பம்,சின்னதில் ஓவ்வொரு புது வருடபிறப்புக்கும் கண்டிப்பாக செய்வார்கள்.


இது இஸ்லாலிய இல்லத்தில் கல்யாணவீடுகளில் மாப்பிள்ளை தஸ்தரில் வைக்கும் பல உணவுகளில் இந்த காம்பினேஷனும் உண்டு. (இடியாப்பம், வட்லாப்பம், கால் பாயா, ரொட்டி)


வட்லாப்பம்
முட்டை - பத்து
சர்கக்ரை - இரண்டு டம்ளர்
தேங்காய் ஒரு முறி முழுவதும்
ஏலக்காய் - முன்று
முந்திரி - 6
நெய் - அரை தேக்கரண்டி

செய்முறை


தேங்காயை அதிகம் தண்ணீர் ஊற்றாமல் கட்டியாக பால் எடுக்கவும்.
முட்டையை நல்ல நுரை பொங்க அடித்து கொள்ளவும்.
சர்க்கரை பொடித்து , தேங்காய் பால்,சர்க்கரை, முட்டையை ஒன்றாக நன்கு கலக்கவும்.
முந்திரியை பொடியாக அரிந்து நெயில் வறுத்து சேர்க்கவும்.
ஏலக்காயை அப்படியேவும் போடலாம், நேரம் கிடைப்பவர்கள் ஏலக்காயின் உள்ளே இருக்கு விதைகளை மட்டும் எடுத்து லேசாக வறுத்து பொடித்து போட்டால் சுவை சூப்பராக இருக்கும்.
எல்லாம் கலக்கிய்தும் கலவையை ஒரு முடி போட்ட சில்வர் டிபன் பாக்ஸில் வைத்து குக்கரி ஆவி வந்து வெயிட் போட்டு ஐந்து விசில் வந்ததும் தீயின் தனலை சிம்மில் வைத்து பத்து நிமிடம் கழித்து இரக்கவும். குக்கர் அடியில்







சரியான அளவு தண்ணீரை ஊற்றி கொள்ளவும்.


சுவையான சூப்பரான முட்டை வட்லாம் ரெடி.



இது இடியாப்பம், ஆப்பம், தோசை ஆகியவற்றிற்கு பொருந்தும், இஸ்லாமிய இல்ல ஸ்பெஷல் உணவாகும்.


பாயா குருமா
ஆட்டுகால் - ஒரு செட்
வெங்காயம் - ஐந்து
தக்காளி - ஐந்து
பச்ச மிளகாய் - நான்கு
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
உப்பு தூள் - ருசிக்கு தேவையான அளவு
த்னியாதூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கொத்து மல்லி, புதினா - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முன்று மேசைகரண்டி
எண்ணை - நான்கு மேசை கரண்டி
பட்டை கிராம்பு, ஏலம் - தலா நான்கு
தயிர் - நான்கு மேசைகரண்டி
தேங்காய் - அரை மூறி
முந்திரி - பத்து
கசகசா- ஒரு மேசைகரண்டி

செய்முறை

1. முதலில் சுத்தம் செய்த பாயாவில் முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு ,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு மேசை கரண்டி அளவு சேர்த்து கலக்கி குக்கரில் நன்கு வேகவிடவும், பாய வேக 20 லிருந்து 30 நிமிடம் எடுக்கும்.

ஐந்து விசில் வந்ததும் தீயின் தனலை குறைத்து வைத்து பிறகு வேகவிட்டு இரகக்வும்.

2. தேங்காய்,கசகச, முந்திரியை நல்ல மையாக அரைத்து கொள்ளவும்.

3. ஒரு வாயகன்ற சட்டியில் எண்ணையை காயவைத்து பட்டை + கிராம்பு+ஏலம் சேர்த்து வெடிய விட்டு, வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கலர் மாறும் வரை வதக்கவும்.

4. அடுத்து சிறிது கொத்துமல்லி ,புதினா, தக்காளி, பச்சமிளகாய், மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், உப்பு தூள், எல்லாம் சேர்த்து வதக்கி, தயிரையும் சேர்த்து நன்கு கிரேவி பதம் வர தீயின் தனலை சிம்மில் வைத்து கூட்டை
கிரிப்பாக்கவும்.

5. கால் வெந்ததும் கூட்டில் அரைத்த தேங்காய் கலவையையும் ஊற்றி தேவைக்கு குழம்பு பததிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு தேங்காய் வாடை அடங்கும் வரை கொதிக்க விட்டு, மீதி உள்ள கொத்து மல்லி புதினாவை தூவி இரகக்வும்



.


குறிப்பு

குருமா என்று சொல்லும் போது தனியாத்தூள் அதிகமாக சேர்க்க தேவையில்லை. நாங்க ரொம்ப கம்மியாக தான் இதில் சேர்ப்போம், சில பேருக்கு தனியாதூள் சேர்த்து செய்து பழக்கம் ஆகையால் குறைந்த அளவில் இதில் கொடுத்துள்ள்ளேன்.
கால்பாயா மிளகு சால்னாவில் (மிளகு, தனியா தூள் கூடுதலாகவும் சேர்க்கனும்) இது பாயா குருமா.
ஆட்டு பாட்ஸில், கால், குடலில் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் ஆகையால் அதிக எண்ணை தேவையில்லை.
இதற்கு கோதுமை ரொட்டி நல்ல இருக்கும்.
நடக்க ஆரம்ப்பிக்கும் குழந்தைகளுக்கு இது காரமிலலாமல் அடிக்கடி செய்து கொடுப்பது நல்லது,
அதிக கால் வலி மூட்டு வலி உள்ளவர்களும் அடிக்கடி செய்ட்து சாப்பிடலாம்.



வெளிநாடுகளில் பிரிந்து வாழ்பவர்கள். பல வேலை பிஸியில் இருப்பீர்கள், வாரம் ஒரு முறையாவது அம்மாவை தனிப்பட்ட முறையில் விசாரியுங்கள், தாய் தன் தேவையை யாரிடமும் கூறுவதில்லை.தன்னை கவனித்துகொள்வதும் இல்லை. நீங்களா பார்த்து என்ன தேவை என்பதை உரிய நேரத்தில் செய்யுங்கள். பிழைப்பை கருதி அனைவரும் பிரிந்து வாழ்கிறோம். தாயிக்கென சிறிது நேரமாவது ஒதிக்கி இனிதாய் பேசுங்கள்.
தாய் என்றும் நம்மையே நினைத்து கொண்டு இருப்பவள். என்ன வீட்டு செலவிற்கென பணம் அனுப்பினாலும் , அம்மாவிற்கு என்று தனியாக ஒரு தொகை அனுப்புங்கள்.
தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்/
உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.