Sunday, July 31, 2011

பேபி கார்ன் பஜ்ஜி - Baby corn bajji





பேபி கார்ன் பஜ்ஜி


குழ‌ந்தைக‌ளுக்கு ரொம்ப‌ பிடித்த‌து, ச‌த்தும் அதிகம் இதை செய்யும் போது முழுவ‌து க‌ட‌லைமாவில் முக்கி பொரிக்காம‌ல் லேசாக‌ கார்ன் வெளியில் தெரிவ‌து போல் செய்தால் பிள்ளைக‌ளுக்கு ரொம்ப‌ பிடிக்கும்.

தேவையான‌ பொருட்க‌ள்

பேபிகார்ன் = ஆறு
க‌ட‌லை மாவு = முன்று மேசை க‌ர‌ண்டி
கார்ன் மாவு = ஒரு தேக்கர‌ண்டி
பொட்டு க‌ட‌லை பொடி = ஒரு தேக்க‌ர‌ண்டி
உப்பு = ருசிக்கு தேவையான‌ அள‌வு (கால் தேக்க‌ரண்டி)
பெப்ப‌ர் பொடி = கால் தேக்க‌ர‌ண்டி
ரெடி க‌ல‌ர் பொடி = கால் தேக்க‌ர‌ண்டி
பேக்கிங் ப‌வுட‌ர் = கால் தேக்க‌ர‌ண்டி
எண்ணை + ப‌ட்ட‌ர் = பொரிக்க‌ தேவையான‌ அள‌வு

செய்முறை

1.பேபி கார்னை ந‌ன்கு க‌ழுவி நீள‌வாக்கில் இர‌ண்டாக‌ க‌ட் ப‌ண்ணி கொள்ள‌வும்.

2.க‌ட‌லைமாவு, கார்ன் மாவு, பொட்டுக‌ட‌லை பொடியை ம‌ற்றும் உப்பு, பெப்ப‌ர் பொடி, பேக்கிங் ப‌வுட‌ர் அனைத்தையும் ப‌ஜ்ஜிமாவு ப‌த‌த்திற்கு க‌ரைத்து கொள்ள‌வும்.



3. பட்டர் + எண்ணையை காயவைத்து தீயின் அளவை மீடியமாக வைத்து கரைத்த கலவையில் கார்னை தோய்த்து பொரித்து எடுக்கவும்.

4.. சுவையான குழந்தைகளுக்கு பிடித்த கார்ன் பஜ்ஜி ரெடி டொமேட்டோ கெட்சப்புடன் சாப்பிட கொடுக்கவும், எல்லா கார்னும் நிமிஷத்தில் பறந்து விடும்


I sending this recipe to Reva's Corn for dinner event.

ரமலானில் செயல் படுத்த வேண்டிய திட்டங்கள். கொஞ்சம் இதையும் போய் பாருங்களேன்.

ரமலானில் ஓதவேண்டிய முக்கியமான துஆக்கள்

16 கருத்துகள்:

ஜெய்லானி said...

ஆ..பஜ்ஜி எனக்கே ..யாருக்கும் தரமாட்டேனே..!!!

Angel said...

ஜலீலா .ரெசிபிக்கு மிக்க நன்றி இப்ப UAE வந்திடீங்கன்னு நினைக்கிறேன் .I AM GOING TO INDIA
துபாய் மேலே போகும்போது டாட்டா காட்டுறேன்.
ஜெய் தம்பி நான் கூட நல்லா பஜ்ஜி செய்வேன் .கண்டிப்பா பார்சல் செய்றேன்
(நம்மாலான உதவி )

Reva said...

Akka, tea kudichutae unga post parthein... sappita maathiru irunthathu:)
Reva

ஆமினா said...

நல்ல குறிப்பு அக்கா

வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

//ஜெய் தம்பி நான் கூட நல்லா பஜ்ஜி செய்வேன் .கண்டிப்பா பார்சல் செய்றேன்
(நம்மாலான உதவி ) //

மறக்காம ஷார்ஜா பக்கம் பறக்கும் போது கீழேப்போடுங்க ...!!
ஐ..அஸ்கு ...நான் சாப்பிடுவேன்னு நினைச்சீங்களா ? அதான் இல்ல ..என்னோட மேனேஜருக்கு குடுக்கதான் ..அதுக்கு பிறகு எனக்கு எப்படியும் ஒரு மாசம் லீவு கிடைச்சிடுமில்லே ஹா..ஹா..

பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .. :-)


ஜலீலாக்காவ் ஒரு வேளை பஜ்ஜி உங்களுக்கு கிடைச்சா பத்திரமா அதுலே ஃபிஃப் பாஃப் அடிச்சு வையுங்க. அப்புறமா வந்து வாங்கிக்கிரேன் :-))

athira said...

சூப்பர் ஜலீலாக்கா.. இது புது முயற்சியாக இருக்கே, இதுக்கு முன் நான் எங்கேயும் பார்த்ததில்லை. எனக்கு சோள/ழன் என்றான் நல்ல விருப்பம்.

//ஜெய்லானி said...

ஆ..பஜ்ஜி எனக்கே ..யாருக்கும் தரமாட்டேனே..!!!//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்கு அனியன் பஜ்ஜி, அஞ்சலின் ரெடி பண்ணுறா:). இதை என்னிடம் விட்டிடுங்க:)).

ஸாதிகா said...

முயற்சித்தது இல்லை.இந்த ரமலானில் டிரை பண்ணிடுவோம்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல குறிப்பு அக்கா.
வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

டேஸ்ட்டி பஜ்ஜி..

Lifewithspices said...

i shd try nalla irukku..

அந்நியன் 2 said...

அழகான படைப்பு வாழ்த்துக்கள் சகோ.

Menaga Sathia said...

அசத்தல் பஜ்ஜி!!

நட்புடன் ஜமால் said...

எனக்கும் பிடிக்கும் பேபி கார்ன்

Chitra said...

நிச்சயம் செய்து பார்ப்பேன்.... நன்றி.

இமா க்றிஸ் said...

பிடிச்சு இருக்கு, நானும் ட்ரை பண்ணிப் பார்க்கிறேன் ஜலீ.

Umm Mymoonah said...

Romba super, my kids will love this. Thank you for linking with Any One Can Cook :)

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா