Wednesday, November 9, 2011

கர்நாடகா ஸ்டைல் நெல்லிக்காய் சாதம்




கர்நாடகா ஸ்டைல் நெல்லிக்காய் சாதம்.
தேவையான பொருட்கள்
அரிசி - ஒரு டம்ளர்
லெமன் ஜூஸ்  - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி  -கால் தேக்கரண்டி
உப்பு – ருசிக்கு தேவையான அளவு
அரைக்க
பெரிய நெல்லிக்காய் - இரண்டு
கொத்துமல்லி கீரை – இரண்டு மேசை கரண்டி பொடியாக அரிந்தது
பச்சமிளகாய் – ஒன்று (அ) காரத்திற்கு ஏற்ப
இஞ்சி – அரை இஞ்ச் அளவு
தாளிக்க
எண்ணை – ஒரு மேசைகரண்டி
கடுகு ¼ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு –ஒரு மேசைகரண்டி
வேர்கடலை – ஒரு மேசைகரண்டி
கருவேப்பிலை – 8 இதழ்
பூண்டு – ஒரு பல் 


செய்முறை
சாதத்தை உதிரியாக வடித்து கொள்ளவும். ஆறவைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை மையாக அரைக்காமல் மிக்சியில் கர கரப்பாக திரித்து கொள்ளவும்.
தாளிகக் கொடுத்துள்ளவைகளை தாளித்து திரித்த கலவையை சேர்த்து வதக்கி எலுமிச்சைசாறு பிழியவும். தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்.
கலவையை சாதத்தில் கொட்டி நன்கு கிளறவும்.
சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் ரெடி.
தொட்டுக்கொள்ள பாப்கார்ன் சிக்கன், மற்றும் 

 உருளை வறுவலுடன் சாப்பிட யம்மியாக இருக்கும்.

இது மகியின் கர்நாடக ஸ்டைல் எலுமிச்சை சாதத்தை செய்து பார்த்து மேலும் அதே ஸ்டைலில் சிறிது மாற்றத்துடன் என் சுவைக்கு ஏற்ப நெல்லிக்காய் சாதமாக செய்துள்ளேன்.



10 கருத்துகள்:

Angel said...

பார்க்கவே கலர் ஃபுல்லா சூப்பரா இருக்கு .செய்து பார்த்து சொல்கிறேன் .

Priya Suresh said...

Super delicious nellikaayi sadham, inviting..

Unknown said...

உருளை வறுவலுடனா...வாவ் சூப்பர்.. இப்பவே ஒரு பிடி பிடிக்கிறேன்... அக்கா

ஸாதிகா said...

வித்தியாசமான சாதம்தான் ஜலி.பிரஷண்டேஷன் அருமை.

Lifewithspices said...

nellikai rice super sure i shd try it..

மனோ சாமிநாதன் said...

நெல்லிக்காய் சாதம் ஏற்கனவே செய்வது தான். ஆனால் இது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது ஜலீலா! நல்லதாய் நெல்லிக்காய் கிடைத்ததும் அவசியம் செய்து பார்க்கிறேன். புகைப்படமும் மிக அழகு!

Chitra said...

Super healthy post :)

Jaleela Kamal said...

ஏஞ்சலின்

பிரியா
சிநேகிதி

ஸாதிகா அக்கா

கல்பனா

அனைவருக்கும் மிக்க ந்ன்றி

Jaleela Kamal said...

மனோ அக்க்கா உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி சித்ரா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா