Sunday, September 2, 2012

சிக் பீஸ் ஃப்ரூட் சாலட் - Chick peas Fruit Salad





தேவையானவை
வெந்த வெள்ளை கொண்டை கடலை (சிக் பீஸ்) 25 கிராம்
ப்ளம்ஸ் ‍ ‍ 1 பழம்
பேரிக்காய் ‍ 1 பழம்
தர்பூசணி பழம் அரை  கப் (கொட்டை நீக்கி சதுரமாக வெட்டியது)


சாலட் சாஸ் (ட்ரெஸ்ஸிங்)

லெமன் ஜூஸ் ‍ ஒரு மேசை கரண்டி
தேன் ‍ ஒரு மேசைகரண்டி
உப்பு தேவைக்கு
சுக்கு தூள் ‍ அரை தேக்கரண்டி
 செய்முறை

ப்ளம்ஸ் (ஊட்டி ஆப்பில்),பேரிக்காயை மீடியமான அளவில் கட் செய்யவும்.
ஒரு வாயகன்ற பவுலில் கொண்டைகடலை,சதுரமாக வெட்டிய தர்பூஸ் (வாட்டர்மெலன்)அனைத்தையும் ஒன்றாக கலந்துவைக்கவும்/

ஒரு கிண்ணத்தில் லெமன் ஜூஸுடன் சாஸ் செய்ய கொடுத்துள்ள பொருட்களை (லெமன் சாறு,உப்பு,தேன்,சுக்கு தூள்)ஒன்றாக சேர்த்து பவுலில் உள்ள பழகலவையுடன் சேர்க்கவும்.

வித்தியாசமான கலர்ஃபுல் சிக் பீஸ் ஃப்ரூட் சாலட் பார்ட்டிக்கு ரெடி.


டிப்ஸ்: ப்ளம்ஸ் பழம் சில நேரம் புளிக்கும் அதை இப்படி சாலட் ஆக செய்தால் புளிப்பு சுவை தெரியாது.

இதை பாயிஜாவின் பார்ட்டி ஈவன்டுக்கு அனுப்புகிறேன்.

போன பதிவில் குழந்தைகளுக்குவாட்டர் மெலன் ஃபிங்கர்ஸ் செய்தாச்சு, பெரியவர்களுக்கு இது போல் கொண்டைகடலையுடன் சாலட் தயாரிக்கலாம்.
பார்ட்டியிலும் வைக்கலாம் , டயட் செய்பவர்கள் காலை டிபனுக்கு பதிலாக இதை ஒரு பவுல் சாப்பிட்டா நல்ல ஃபில்லிங்காக இருக்கும்.


5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா இருக்குங்க... நன்றி...

Unknown said...

ஹெல்தியாக இருக்கு.. thanks for linking this recipe to my event

Priya Suresh said...

Super healthy salad..lovely combo.

ஸாதிகா said...

சாலட் கலர்ஃபுல்லாக உள்ளது.

Asiya Omar said...

சூப்பர் சாலட். சத்தானது.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா