Sunday, July 24, 2016

அடை தின்ன பழகு - Healthy Adai

வாங்க ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய  Jabong / Myntra
இப்பொழுது இருக்கும் அவசர உலகில் ஆன் லைன் ஷாப்பிங் தான் அனைவரும் விரும்புவது.
இது வரை நான் எதுவும் ஆன் லைனில் வாங்கியதில்லை. எனக்கு என் வீட்டை சுற்றி எல்லாமே கிடைப்பதாலும் , ட்ரெயின் வசதி இருப்பதாலும்  எனக்கு ஷாப்பிங் என்பது பெரிய விஷியமில்லை.

முன்பு என்பையனுக்காக ஒரு முறை வாங்கி இருக்கோம்.

சமீபத்தில் காலேஜில் ஹாஸ்டலில்  இருக்கும் என் பையன் ஆன் லைனில் Jabong  ஐபோங் இனைய தளத்தில் சில அயிட்டங்கள் வாங்கியதாக் சொன்னான், அமெரிக்காவில் இருக்கும் என் தம்பி இங்கு ஷாப்பிங் செய்ததாக சொன்னார்,

வெளிநாடுகளில் பேச்சுலர்கள் சிலருக்கு ஊருக்கு அனுப்ப இப்படி ஆன் லைன் ஷாப்பிங்க் இதன் முலம் தங்கள் தேவைக்கு பிடித்ததை இருந்த இடத்தில் இருந்தே சுலபமாக செலக்ட் செய்து ஊரில் இருக்கும்  உங்கள் அம்மாவுக்கோ, தங்கைக்கோ, உங்கள் அன்பு மனைவிக்கு கிஃப்ட் அனுப்பவோ இதை (Jabong) பயன் படுத்தலாம்.

வெளிநாடுகளில் இண்டஸ்ரியல் ஏரியாவில் வேலைபார்க்கும் பேச்சுலர்களுக்கு கடைக்கு போய் வாங்குவது கொஞ்சம் சிரமமான விஷியம். அவர்களுக்கு கண்டிப்பாக இதுபோல் ஆன் லைன் ஷாப்பிங் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கொஞ்ச நாட்களாக பிளாக் தோழிகள் நிறைய ஈவண்ட் நடத்தி தங்கள் சொந்த செலவில் பரிசு கொடுத்து வந்தனர், இப்ப இது போல் Myntra  நிருவணங்கள் ஸ்பான்சர் செய்து அவர்களே பரிசு தொகையை வழங்கு கின்றனர்.
வலை தோழி பாரதி கமெண்டில் இந்த ஈவண்ட் பற்றி சொல்லி குறிப்புகளை இணைக்க படி சொன்னார்,



********************************************************************************

ஆஹா என்ன ருசி அடை தின்ன பழகு


கோபு சாரின் அடை அவர் போஸ்ட் பண்ணதுமே செய்து பார்த்தாச்சு. நான் சுவைத்ததை நீங்களும் சுவைத்து மகிழுங்கள். அவர் கொடுத்த அளவு.அவருடைய செய்முறை


தேவையானவை

நயம் இட்லி புழுங்கல் அரிசி -  200 கிராம்
நயம் துவரம் பருப்பு                -  125 கிராம்
நயம் கடலைப்பருப்பு              -   50 கிராம்
LG பெருங்காய்ப்பொடி            -  1 சிறிய ஸ்பூன்
சிவப்பு மிளகாய் வற்ற்ல்       -   8 எண்ணிக்கை
பச்சை மிளகாய்                        -   1 அல்லது 2 
தோல் நீக்கிய் இஞ்சி               -   1 சிறிய துண்டு
கருவேப்பிலை                         -   1 ஆர்க் [10-15 இலைகள்]
உப்பு                                             -   1 அல்லது 2 சிறிய ஸ்பூன்








செய்முறை

புழுங்கல் அரிசி + பருப்புகள் மட்டும் 3 மணி நேரம் தண்ணீரில் ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடிகட்டி விட்டு, மற்ற எல்லாப்பொருட்களையும் அதனுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரே தடவையாகவோ அல்லது பிரித்து வைத்து இரண்டு தடவையாகவோ அரைத்துக்கொள்ளலாம். அதிகமாக ஓடஓடத் தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாகவே அரைக்கணும். ஊறிய அரிசியும் பருப்பும் முழுசு முழுசாக இல்லாமல் அரைபட்டால் போதும். இட்லி தோசை மாவு போல மையாக அரைபட தேவையில்லை. 


கவனிக்க

அடை அரைக்கும் போது சற்று கரகரப்பாக அரைத்தால் தான் சூப்பராக வரும்.
 மிக்சியில் அரைத்ததும் ரொம்ப மையாக ஆகிவிடும், அப்படி ஆகாமல் இருக்க ஒரு பகுதி லேசாக திரித்தது போல் இரண்டு சுற்று சுற்றி எடுத்து விட்டு மீதியை எப்போதும் அரைப்பது போல் அரைக்கலாம். மையாக இல்லை. முக்கால் பதம். அரைக்கும் போதே பருப்பு வகைகள் சீக்கிரம் அரை பட்டு விடும். கலக்கும் போது ஒரே சீராக ஆகிடும்.

இதில் சிவப்பு மிளகாயை குறைத்து கொண்டேன். இஞ்சியின் அளவை கூட்டி கொண்டேன்.பச்சமிளகாய் ஒன்று சேர்த்தேன்.
எப்போதும் அடை செய்யும் போது பெரும்பாலும் இஞ்சி பச்சமிளகாய் தான் சேர்ப்பேன். சிவப்பு மிளகாய் சேர்ப்பதாக இருந்தால் ஒன்றிரண்டு தான் சேர்ப்பது.



இதில் சிவப்பு மிளகாய், பச்சமிளகாய், இஞ்சி சேருவதால் காரமும் கொஞ்சம் சுள்ளுன்னு இருக்கும்.







Linking to Gayathiri's Walk through Memory Lane Feb- 13 hosted by Merry tummy  and Spicy Tasty Barathy's My Spicy Recipe - Giveaway event Jan 21 - Feb 25


9 கருத்துகள்:

ஹுஸைனம்மா said...

ரெண்டு வேறுவேறு பதிவுகள் மிக்ஸாகிவிட்டது போல இருக்கே அக்கா?

திண்டுக்கல் தனபாலன் said...

அடை சரி... காரசாரமாக ஒரு சட்னி வேண்டுமே...

Jaleela Kamal said...

ஹுஸைன்னாம்மா என்ன சொல்றிங்க புரியலையே

இதை இரண்டு நாள் கழித்து பப்லிஷ் செய்ய எடிட் செய்து வைத்து இருந்தேன்.

எப்படியே கை தவறி பப்லிஷ் ஆகிவிட்டது போல
பாதி எடிட் செய்து வைத்து இருந்தேன்

////ரெண்டு வேறுவேறு பதிவுகள் மிக்ஸாகிவிட்டது போல இருக்கே அக்கா?//???

இது கோபு சார் போட்டது அபப்டியே இங்கு எடுத்து போட்டுள்ளேன்
படம் + டிப்ஸ் என்னுடையது.


Bharathy said...

Got published in mistake? Jaleela, it looks good! dont change anything anymore. The link is already attached to my site as it is selected. had given lovely tips about online shopping! Adai looks healthy and homely! Thanks a lot for the entry and the links! :)

Asiya Omar said...

எனக்கு இந்த அடை மஞ்சளாக வந்தது,உங்களுக்கு நல்ல வெள்ளையாக முறுகலாக வந்திருக்கு.அருமை.

Menaga Sathia said...

அடை ரொம்ப நல்லாயிருக்கு...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையாக அடை செய்து சாப்பிட்டது கேட்க மிகவும் சந்தோஷம்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//Asiya Omar said...
எனக்கு இந்த அடை மஞ்சளாக வந்தது,உங்களுக்கு நல்ல வெள்ளையாக முறுகலாக வந்திருக்கு.அருமை.//

அடை என்றால் அது மஞ்சளாகவும், சிவப்பாகவும் தான் வர வேண்டும்.

வற்றல் மிளகாய் அதிகம் சேர்த்தால் சிவப்பான கலர் வரும். பருப்பு அதிகம் சேர்ப்பதால் மஞ்சள் கலரும் சேர்ந்து வரும். அதிக நேரம் கல்லிலேயே வைத்து எடுத்தால் முறுகலாக இருக்கும்.

காரசாரமாக இருந்தால் மட்டுமே அடை சுவாரஸ்யப்படும்.

அப்போது தான், அடைக்குத் தொட்டுக்கொள்ள எதுவும் தேவைப்படாமல், அடையை நாம் அப்ப்டியே நாம் சாப்பிடலாம்.

மாதேவி said...

அடை நன்றாக இருக்கிறது.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா