Tuesday, May 6, 2014

சங்கரா மீன் சால்னா



மீன் வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த மீன் சங்கரா மீன் தான்..

Red Snapper Kuzambu


தேவையான பொருட்கள்


சங்கரா மீன் - அரைகிலோ

அரைக்க
வெங்காயம் - 2
பழுத்த தக்காளி - 3

தாளிக்க

எண்ணை - 5 ஸ்பூன்
கடுகு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
பூண்டு - 4 பல்  (தட்டியது)
வெங்காயம் பொடியாக அரிந்தது - சிறியது ஒன்று


பச்சமிளகாய் - 1
கொத்துமல்லி தழை  - சிறிது

கட்டியாக கரைத்த புளி - ஒரு கப்

தேங்காய் - 3 பத்தை அரைத்தது (அ) தேங்காய் பவுடர் - 3 தேக்கரண்டி


மிளகாய் தூள் - 1  தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒன்னறை ஸ்பூன் ( அ) தேவைக்கு




செய்முறை 

மீனை சுத்தம் செய்து கழுவி வைக்கவும்

வெங்காயம் தக்காளியை அரைத்து வைக்கவும்.

வாயகன்ற சட்டியை காயவைத்து அதில் எண்ணை ஊற்றி கடுகு கருவேப்பிலை, பூண்டு சேர்த்து தாளித்து வெங்காயம்  பச்சமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு அரைத்து வைத்த வெங்காயம் தக்காளியை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

அனைத்து தூள் வகைகளையும்  ( மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், உப்பு தூள் சேர்த்து மசாலா வாடை போகும் வரை வதக்கவும்.

பிறகு கரைத்து வைத்த புளியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
கடைசியாக தேங்காய பவுடரை வெண்ணீரில் கரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைத்து கழுவி வைத்துள்ள மீனை போட்டு 5 வேகவைத்து இரக்கவும்.

கொத்துமல்லி தழை தூவி , ப்ளைன் சாதம் , மற்றும் சங்காரா மீன் வறுவலுடன் பரிமாறவும்.

கவனிக்க: இதை அதிக நேரம் வேகவிட்டால் மீன் உடைந்து சால்னா முழுவதும் முள்ளாகிவிடும். மீனை போட்டதும் கரண்டி வைத்து அடிக்கடி கிளறக்கூடாது, துணி கொண்டு சட்டியை பிடித்து லேசாகா சுழற்றி விடனும்.

இதில் இருக்கும் ஒரு இனிப்புதன்மை எனக்கு ரொம்ப பிடிக்கும். சங்கரா மீன் வறுத்தத்தும் குழந்தைகளுக்கு முள்ளில்லாமல் எடுத்து வைத்து கொடுத்தால் ஈசியாக சாப்பிடுவார்கள். ரொம்ப ஷாப்டாக இருக்கும், குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகும்.

டிப்ஸ்: முள்ளு மீன் சாப்பிடும் போது நல்ல வெளிச்சத்தில் உட்கார்ந்து சாப்பிடுங்கள் , இந்த மீனுக்குன்னு தனியாக ஒரு சிறிய தட்டில் வைத்து சாப்பிட்டாலும் நல்லது இல்லை என்றால் சாதத்துடன் மீன் முள் கலந்து தொண்டையில் முள் குத்தி விடும். சாப்பிடும் போது பேசி கொண்டே சாப்பிடாதீர்கள்.

சங்கரா மீன் டிக்கா ஃப்ரை 



சால்னா/கிரேவி
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

10 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

எனக்கும் மிகவும் பிடித்த மீன்...

சென்னை ஞாபகம் வந்தது...

Menaga Sathia said...

எனக்கும் ரொம்ப பிடித்த மீன்,அருமை!!ஊர் ஞாபகம் தான் வருது...

Unknown said...

Fish curry is so yummm akka

சந்திப்போமா said...

enna solla enakku itha saapida kuduththu vaikkala (hotel sappaduthan 3 vezhaikkum)

சந்திப்போமா said...

enna solla ithellam sapida kuduththu vaikkalla enakku (3vezhaiyum hotel sappaduthaan) ungal muyatchchi thodara vazhthukkal akka.

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல மீன் நல்ல ரெசிப்பி
நன்றி சகோதரி

Angel said...

பல வருஷம் கழிச்சு நேற்றுதான் பக்கத்துக்கு சிட்டி மார்க்கட்டில் இந்த மீன் fresha கிடைச்சது ..
குழம்பு பொரியல்னு செஞ்சிட்டேன் ..
மீன் உண்ணும் போது // குறிப்பு மிக அவசியமான ஒன்று ..அம்மா சொல்வாங்க மீன் உணவு சாப்பிடும்போது வளவளன்னு பேசவும் கூடாது என்று :)

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி

புது வருகைளார்களுக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஏஞ்சலின் // குறிப்பு மிக அவசியமான ஒன்று ..அம்மா சொல்வாங்க மீன் உணவு சாப்பிடும்போது வளவளன்னு பேசவும் கூடாது என்று :)

அம்மாக்கள் அனைவரும் பிள்ளைகளின் நலம் காப்பவர்கள் தானே..

Unknown said...

kuzhambu romba nalla irukku.Try panren akka.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா