Wednesday, June 11, 2014

பச்ச மாங்காய் சட்னி - Manga Chutney (கர்பிணி பெண்களுக்கு)









கேரளா ஸ்பெஷல் மாங்காய் சட்னி கர்பிணி பெண்கள் மசக்கையின் போது ஏறபடும் வாய் கசப்பிற்கு இந்த சட்னி மிகவும் அமிர்தமாக இருக்கும்.இதில் காஞ்ச மிளகாய் 5, 6 போட்டு கார சாரமாக செய்யனும். சாததில் போட்டு பிசைந்து சாப்பிடும் போது காரம் தெரியாது.நான் இதை தோசைக்கு தொட்டு கொள்ள அரைத்ததால் காரம் குறைவாக போட்டு இருக்கிறேன்.

Pacha manga sadni
Kerala Special Raw Mango Chutney 
தேவையான பொருட்கள்
மாங்காய் -  1
தேங்காய் – அரை கப்
காஞ்ச மிளகாய் – 3 எண்ணிக்கை
உப்பு – தேவைக்கு
சின்ன வெங்காயம் – 3 எண்ணிக்கை
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – ஒரு பல்

தாளிக்க
எண்ணை – கால் தேக்கரண்டி
கடுகு கால் தேக்கரண்டி
கருவேப்பிலை – 5 இதழ்


செய்முறை

மாங்காயை தோல் நீக்கி பொடியாக அரிந்து கொள்ளவும்.
மிக்சியில் மாங்காய், தேங்காய், உப்பு,மிளகாய், இஞ்சி பூண்டு, சின்ன வெங்காயம் அனைத்தையும் மிக்சியில் இட்டு அரைக்கவும்.
கடைசியாக கடுகு கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையான மாங்காய் சட்னி ரெடி.
சாதத்தில் பிசைந்து சாப்பிட செய்வதாக இருந்தால் இந்த அளவிற்கு மொத்தம் 5 வர மிளகாய் சேர்க்கவேண்டும். அரைப்பது மையாக அரைக்க வேண்டாம்.சிறிது கொர கொரப்பாக அரைத்தால் சாதத்தில் போட்டு பிசறி சாப்பிட நன்றாக இருக்கும்.


படம் முதல் தடவை செய்யும் போது சரியாக எடுக்க வில்லை. ஆகையால் மறுபடி 29.10.14 அன்று சேர்த்துள்ளேன்
பரிமாறும் அளவு : முன்று நபர்களுக்கு
ஆயத்த நேரம் – 7 நிமிடம்.
ஆக்கம்
ஜலீலா கமால்
துபாய்



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

6 கருத்துகள்:

துளசி கோபால் said...

கர்பிணி இல்லை என்றாலும் படிக்கும்போதே வாயில் எச்சில் ஊறுதே ஜலீலா!

பச்சை மாங்காய்க்குப் பதிலா பச்சை ஆப்பிள் வச்சு செஞ்சு பார்த்துப்பேன். எங்க மாங்காய் அதுதான்.

ஆமாம்.... உங்க 'தேவையான பொருட்கள்' லிஸ்டில் மாங்காயைக் காணோமே!!!!

Jaleela Kamal said...

வாங்க துளசி அக்கா, வருகைக்கு ரொம்ப நன்றி..
இது கர்பிணி பெண்களுக்கு மட்டும் இல்லை படிக்கிற, எல்லாருக்குமே படிக்கும் போதே உடனே சாப்பிடனும் போல் இருக்கும், எனக்கே மறுபடி உடனே சாப்பிடனும் போல இருக்க்கு


தவற்றை சுட்டி காண்பித்தமைக்கு மிக்க ந்னறி இப்போது இணைத்து விட்டேன்.

Krishnaveni said...

very tasty one, good

மாதேவி said...

சுவையானது.

எங்கவீட்டு சமையலில் இடையிடையே இடம்பிடித்துக்கொள்ளும்.

கோமதி அரசு said...

துளசி சொல்வதை ஆமோதிக்கிறேன்.
அருமையான மாங்காய் சட்னி.

Jaleela Kamal said...

கிருஷ்னவேணி, மாதேவி, கேமதி அக்கா வருகைக்கு மிக்க நன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா