Tuesday, June 3, 2014

அயில மீன் குழம்பு - Scud Fish Curry






அயில மீன் குழம்பு 






 சௌராஷ்டிரிய முறையில் மீன் குழம்பு


இது சௌராஷ்டிர முறையில் நான் செய்த அயில மீன் குழம்பு.


//பொதுவாக நான் செய்யும் குழம்பு வகைகளில் வெங்காயம் தக்காளி தயிர் இல்லாமல் வைக்க முடியாது. ஆனால் சௌராஷ்டிரயர்களின் உணவு வகைகள் மிகவும் வித்தியாசமானது.//

இந்த வகை குழம்பு ரொம்ப ஈசி, மீன் இல்லாத சமயத்தில், முட்டை , கருனை கிழங்கு, சேப்பங்கிழங்கு இது போல் ஏதாவது ஒரு காயில் இதே போல் செய்யலாம்.


தேவையான பொருட்கள்

அயில மீன் ‍ கால் கிலோ

 அரைக்க‌
முழு காஞ்ச மிளகாய் ( சிவப்பு மிளகாய்)   3
முழு மிளகு ‍ 1 தேகக்ரண்டி
சீரகம் ‍ ஒரு தேக்கரண்டி
சோம்பு ‍ ஒரு தேகக்ரண்டி
ஆச்சி அல்லது சக்தி குழம்பு பொடி ‍ ஒரு தேக்கரண்டி 
தேஙகாய் ‍ ஒரு சிறிய கப் ( ஒரு முடி தேஙகாயில் முன்றி ஒரு பங்கு)

தாளிக்க 
எண்ணை 
சீரகம்
கருவேப்பிலை
புளி ‍ ஒரு லெமன் சைஸ்






 செய்முறை

 புளியை ஒரு டம்ளர் வெண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைத்து கொள்ளவும்.
மிக்சியில் மிளகு, சீரகம், சோம்பு,காஞ்ச மிளகாய், சேர்த்து திரித்து கொண்டு அத்துடன் குழம்பு பொடி தேங்காய் சேர்த்து நன்கு மையாக அரைகக்வும்.
மீனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
சட்டியை அடிப்பில் ஏற்றி எண்ணை ஊற்றி காயவைத்து எண்ணை சீரகம், கருவேப்ப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுதை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.
புளி கரைத்த்ததை ஊற்றி , தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு மசாலா வாடை போகும் வரை கொதிக்கவிட்டு கடைசியாக மீனை போட்டு வேகவிட்டு இரக்கவும்.

 கவனிக்க: தண்ணீர் எல்லாம் சேர்த்து 4 டம்ளர் இருக்கும்படி ஊற்றினால் கொதித்து முக்கால் டம்ளர் அளவு வற்றும்.

 இது 4 நபருக்கு போதுமானது. இதில் வெங்காயம் தக்காளி சேர்க்க வில்லை குழந்தைகளுக்கு செய்து கொடுப்பதாக இருந்தால் முள்ளில்லாத மீனில் செய்து கொடுக்கவும்.இது சிறிது காரசாரமாக இருக்கும். காரம் அதிகம் என்றால் தேங்காய் அரை மூடி சேர்த்து அரைத்துகொள்ளுங்கள்.

குழ்ம்பு பொடி ஆச்சி அல்லது சக்தி குழம்பு பொடி சேர்த்து செய்யவும்.அதுவும் இல்லை என்றால் தனியாத்தூள் மட்டும் சேர்த்துககொள்ளலாம்.

1 கருத்துகள்:

ஸாதிகா said...

அயில மீன்குழம்பு மணமணக்கின்றது.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா