Tuesday, June 24, 2014

சிக்கன் மஜ்பூஸ் Chicken Majboos



அரேபியர்களின் பாரம்பரிய சாதவகைகளான மட்டன் கப்சா, சிக்கன் கப்சா, மட்டன் மந்தி , சிக்கன் மந்தி ,சிக்கன் மத்பி, மட்டன் மத்பி, மக்லூபா போன்றவை போல் இது சிக்கன் மஜ்பூஸ்.


இது அரேபியர்களின் பிரியாணி.
பாரம்பரிய சமையல்
அரேபியர்களின் உணவு வகைகளின் காரம் அவ்வளவாக இருக்காது. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள், என் மகன்கள் இருவருக்கும் பிரியாணியில் தக்காளி, வெங்காயம் எதுவும் வாயில் தட்டக்கூடாது. இந்த வகை பிரியாணியில் அதிக தக்காளியோ வெங்கயாமோ கிடையாது.




இது சிக்கனை வேகவைத்து அந்த தண்ணீரில் சாதத்தை தம்மில் விடுவது.




Chicken Majboos

சிக்கனில் ஊறவைக்க

சிக்கன் துண்டுகள் ‍ 400 கிராம்
பாஷா கிச்சன் கிங் மசாலா ‍ 1 தேக்கரண்டி
பப்ரிக்கா பவுடர் ‍  ஒரு தேக்கரண்டி
உப்பு ‍ தேவைக்கு
எலுமிச்சை சாறு ‍ 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது ‍ 1ஒன்னறை தேக்கரண்டி

தாளிக்க‌

பட்டர் + எண்ணை ‍ - 4 மேசைகரண்டி
பொடியாக அரிந்த வெங்காயம் - ‍ 2 
நார் சிக்கன் ஸ்டாக் கியுப் ‍ - 1 
கருப்பு மிளகு தூள் ‍ - அரை தேக்கரண்டி
சீரகத்தூள் ‍ - ஒரு தேக்கரண்டி
கிராம்பு மற்றும் பட்டை பொடி - தலா கால்  கால் தேக்கரண்டி
பொடியாக அரிந்த தக்காளி ‍ - ஒன்று 
தக்காளி பேஸ்ட் ( சபா பிராண்ட்) 25 கிராம்
துருவிய இஞ்சி ‍ - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் ‍ - 600 மில்லி (முன்று டம்ளர்)

அரிசி டோனார் பிராண்ட் லாங் கிரைன் ரைஸ் ‍-400 கிராம்
(Donar Long Rice)


அடுப்பு கரி ( சுருள் கரி) துண்டு - ஒன்று (கிரில் செய்யும் போது பாயில் பேப்பருக்குள் வைக்க) 

ஆலிவ் ஆயில் ‍ சிக்கன் கிரில் செய்ய ‍ 2 மேசைகரண்டி

கடைசியாக வறுத்து சாதத்தின் மேல் தூவ‌

பட்டர் ‍  ஒரு தேக்க்ரண்டி
பொடியாக நருக்கிய பாதம் ‍ 1 தேக்க்ரண்டி
முந்திரி ‍ 8 எண்ணிக்கை 



செய்முறை


அரிசியை களைந்து ஊறவைக்கவும். ((அரபிக் சாத வகைகளுக்குன்னு பிரத்தேயக மாக பயன் படுத்துவது ஒரு சில பிராண்ட் அரிசிவகைகள், இதில் நான் பயன் படுத்தியுள்ளது டோனார் லாங்கிரைன் ரைஸ்))

சிக்கனில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலாவை சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.



ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்க்கி அதில் எண்ணையை ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்/.





 அடுத்து தக்காளியை அரிந்து சேர்த்து , தக்காளி பேஸ்டையும் சேர்த்து கிளறவும்.
பிற்கு சிக்கன் ஸ்டாக் துண்டு, துருவிய இஞ்சி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.



 அடுத்து ஊறவைத்த சிக்கனை போட்டு நன்கு கிளறவும்.



ஒன்றிற்கு இரண்டு பங்கு அளவு தன்ணீர் அளந்து ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து சிக்கன் பாதி அளவிற்கு வெந்ததும். அதிலிருந்து சிக்கன் துண்டுகளை எடுத்து விடவும்.




 ஒன்றிற்கு இரண்டு பங்கு அளவு தன்ணீர் அளந்து ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து சிக்கன் பாதி அளவிற்கு வெந்ததும். அதிலிருந்து சிக்கன் துண்டுகளை எடுத்து விடவும்.


கொதித்த தன்ணீரில் அரிசியை களைந்து சேர்த்து நன்கு கொதிக்க விட்டு  தீயின் தனலை மிக்க்குறைவாக வைத்து தம்மில் விடவும்.



அடுத்து சிக்கனனில் சிறிது மிளகு தூள் , ஆலிவ் ஆயில் 2 மேசைகரண்டி, சிறிது உப்பு சேர்த்து பிரட்டி ஒவனில் கிர்ல் செய்ய வேண்டும்.கிரில் செய்ய ட்ரேயில் சிக்கனை அடுக்கி வைத்து விட்டு,





 அடுப்புகரியை நன்கு கங்காக்கி (சூடு படுத்தி) ஒரு பாயில் பேப்பரில் வைத்து  சிக்கனின் நடுவில் வைத்து  மூடி வைக்கவும்.






முற்சூடு படித்திய ஓவனில் 




10 நிமிடம் கீழ்ட்ரேயிலும்,  10 நிமிடம் மேல் ட்ரேயிலும் வைத்து கிரில் பண்ணவும்,



வெந்த சாதத்தின் மேல் கிரில் செய்த சிக்கனை வைத்து பாதம் பிஸ்தாவை பட்டரில் வறுத்து மேலே தூவவும்.

சுவையான மஜ்பூஸ் ரெடி.




சுவையான அரபிக் பிரியாணி அதிக எண்ணை இல்லாமல் ஆரோக்கியமான மஜ்பூஸ் ரெடி

இதற்கு தொட்டு கொள்ள பக்க உணவாக விரும்பிய சாலட் வகைகள், இனிப்பு வகைகள் செய்து கொள்ளலாம்.

பிரியாணிக்கு வைக்கும் ரெய்த்தாவுக்கு பதில் டொமேட்டோ சல்சா.


தக்காளி , வெங்காயம் , பச்ச மிளகாய் , உப்பு, பேசில் இலை அல்லது ஒரிகானோ சிறிது சேர்த்து கொர கொரப்பாக அரைத்து பக்க உணவாக வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Arabic Biriyni Step by Step Majboos - Traditional Arabic Biriyani


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, June 11, 2014

பச்ச மாங்காய் சட்னி - Manga Chutney (கர்பிணி பெண்களுக்கு)









கேரளா ஸ்பெஷல் மாங்காய் சட்னி கர்பிணி பெண்கள் மசக்கையின் போது ஏறபடும் வாய் கசப்பிற்கு இந்த சட்னி மிகவும் அமிர்தமாக இருக்கும்.இதில் காஞ்ச மிளகாய் 5, 6 போட்டு கார சாரமாக செய்யனும். சாததில் போட்டு பிசைந்து சாப்பிடும் போது காரம் தெரியாது.நான் இதை தோசைக்கு தொட்டு கொள்ள அரைத்ததால் காரம் குறைவாக போட்டு இருக்கிறேன்.

Pacha manga sadni
Kerala Special Raw Mango Chutney 
தேவையான பொருட்கள்
மாங்காய் -  1
தேங்காய் – அரை கப்
காஞ்ச மிளகாய் – 3 எண்ணிக்கை
உப்பு – தேவைக்கு
சின்ன வெங்காயம் – 3 எண்ணிக்கை
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – ஒரு பல்

தாளிக்க
எண்ணை – கால் தேக்கரண்டி
கடுகு கால் தேக்கரண்டி
கருவேப்பிலை – 5 இதழ்


செய்முறை

மாங்காயை தோல் நீக்கி பொடியாக அரிந்து கொள்ளவும்.
மிக்சியில் மாங்காய், தேங்காய், உப்பு,மிளகாய், இஞ்சி பூண்டு, சின்ன வெங்காயம் அனைத்தையும் மிக்சியில் இட்டு அரைக்கவும்.
கடைசியாக கடுகு கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையான மாங்காய் சட்னி ரெடி.
சாதத்தில் பிசைந்து சாப்பிட செய்வதாக இருந்தால் இந்த அளவிற்கு மொத்தம் 5 வர மிளகாய் சேர்க்கவேண்டும். அரைப்பது மையாக அரைக்க வேண்டாம்.சிறிது கொர கொரப்பாக அரைத்தால் சாதத்தில் போட்டு பிசறி சாப்பிட நன்றாக இருக்கும்.


படம் முதல் தடவை செய்யும் போது சரியாக எடுக்க வில்லை. ஆகையால் மறுபடி 29.10.14 அன்று சேர்த்துள்ளேன்
பரிமாறும் அளவு : முன்று நபர்களுக்கு
ஆயத்த நேரம் – 7 நிமிடம்.
ஆக்கம்
ஜலீலா கமால்
துபாய்



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, June 3, 2014

அயில மீன் குழம்பு - Scud Fish Curry






அயில மீன் குழம்பு 






 சௌராஷ்டிரிய முறையில் மீன் குழம்பு


இது சௌராஷ்டிர முறையில் நான் செய்த அயில மீன் குழம்பு.


//பொதுவாக நான் செய்யும் குழம்பு வகைகளில் வெங்காயம் தக்காளி தயிர் இல்லாமல் வைக்க முடியாது. ஆனால் சௌராஷ்டிரயர்களின் உணவு வகைகள் மிகவும் வித்தியாசமானது.//

இந்த வகை குழம்பு ரொம்ப ஈசி, மீன் இல்லாத சமயத்தில், முட்டை , கருனை கிழங்கு, சேப்பங்கிழங்கு இது போல் ஏதாவது ஒரு காயில் இதே போல் செய்யலாம்.


தேவையான பொருட்கள்

அயில மீன் ‍ கால் கிலோ

 அரைக்க‌
முழு காஞ்ச மிளகாய் ( சிவப்பு மிளகாய்)   3
முழு மிளகு ‍ 1 தேகக்ரண்டி
சீரகம் ‍ ஒரு தேக்கரண்டி
சோம்பு ‍ ஒரு தேகக்ரண்டி
ஆச்சி அல்லது சக்தி குழம்பு பொடி ‍ ஒரு தேக்கரண்டி 
தேஙகாய் ‍ ஒரு சிறிய கப் ( ஒரு முடி தேஙகாயில் முன்றி ஒரு பங்கு)

தாளிக்க 
எண்ணை 
சீரகம்
கருவேப்பிலை
புளி ‍ ஒரு லெமன் சைஸ்






 செய்முறை

 புளியை ஒரு டம்ளர் வெண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைத்து கொள்ளவும்.
மிக்சியில் மிளகு, சீரகம், சோம்பு,காஞ்ச மிளகாய், சேர்த்து திரித்து கொண்டு அத்துடன் குழம்பு பொடி தேங்காய் சேர்த்து நன்கு மையாக அரைகக்வும்.
மீனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
சட்டியை அடிப்பில் ஏற்றி எண்ணை ஊற்றி காயவைத்து எண்ணை சீரகம், கருவேப்ப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுதை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.
புளி கரைத்த்ததை ஊற்றி , தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு மசாலா வாடை போகும் வரை கொதிக்கவிட்டு கடைசியாக மீனை போட்டு வேகவிட்டு இரக்கவும்.

 கவனிக்க: தண்ணீர் எல்லாம் சேர்த்து 4 டம்ளர் இருக்கும்படி ஊற்றினால் கொதித்து முக்கால் டம்ளர் அளவு வற்றும்.

 இது 4 நபருக்கு போதுமானது. இதில் வெங்காயம் தக்காளி சேர்க்க வில்லை குழந்தைகளுக்கு செய்து கொடுப்பதாக இருந்தால் முள்ளில்லாத மீனில் செய்து கொடுக்கவும்.இது சிறிது காரசாரமாக இருக்கும். காரம் அதிகம் என்றால் தேங்காய் அரை மூடி சேர்த்து அரைத்துகொள்ளுங்கள்.

குழ்ம்பு பொடி ஆச்சி அல்லது சக்தி குழம்பு பொடி சேர்த்து செய்யவும்.அதுவும் இல்லை என்றால் தனியாத்தூள் மட்டும் சேர்த்துககொள்ளலாம்.

Monday, June 2, 2014

கேரட் பாஸ்தா - Carrot Pasta



குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ் கொடுத்தனுப்ப எத வைத்தாலும் அப்படியே திரும்பி ( போன மச்சான் திரும்பிவந்தான்னு ) வருதேன்னு அம்மா மார்கள் கவலை படுவதுண்டு. மதிய உணவுக்கு மெனக்கிடுவதை விட காலையில் குழந்தைகள் லன்ச் பாக்ஸ்க்கு விதவிதமாக கொஞ்சம் சிரமம் பார்க்காமல் செய்து வைத்தால் குழந்தைகள் குஷியுடன் சாப்பிட்டுவருவார்கள்.
இரவு முழுவதும் வயிறு காலியாக இருக்கிறது, அதில் காலையில் ஏதாவது பாலை குடித்து விட்டு போனால் இந்த பஸ்ஸில் அல்லது ஆட்டோவில் சுற்றி சுற்றி போய் சேருவதறகுள் அடிக்கிற இந்த வெயிலுக்கு வாந்தி தான் வரும்.

அதுவும் குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பாஸ்தா என்றால் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். இது போல் செய்து வைத்தால் ரொம்ப ஈசியாக நோகாமல் சாப்பிடுவார்கள். 
பாஸ்தா முதல் நாளே வேக வைத்து, வைத்து கொண்டால் 10 நிமிடத்துக்குள் செய்து லன்ச் பாக்ஸ் க்கு அனுப்பி விடலாம். தேவைப்பட்டால் இதில் எலும்பில்லாத சிக்கனை கூடசேர்த்து கொள்ளலாம்.

(முக நூலில் சமையல் அட்டகாசம் பேஜில் ஒரு தோழி(nafeesa Banu) ஈசியான லன்ச் பாக்ஸ் ரெசிபி கேட்டதால் இந்த பாஸ்தா) 

தேவையான பொருட்கள் 

வேகவைத்த பாஸ்தா - அரை கப்
வெங்காயம் - பொடியாக நறுக்கியது இரண்டு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு விழுது -  அரை தேக்கரண்டி 
தக்காளி பேஸ்ட் -  ஒரு மேசை கரண்டி
கேரட் பொடியாக நறுக்கியது - இரண்டு மேசைகரண்டி
உப்பு -  அரை தேக்கரண்டி
மிளகாய் தூள்  - கால் தேக்கரண்டி
பட்டர் + எண்ணை - ஒரு தேக்கரண்டி



செய்முறை

நான்ஸ்டிக் பேனில் எண்ணை + பட்டரை ஊற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கேரட் , மிளகாய் தூள், உப்பு சேர்த்துவதக்கி 3 நிமிடம் வேகவைக்கவும்.
பிறகு தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு பிரட்டி 2 நிமிடம் ஒரு சேர கிளறி இரக்கவும்.


Linking to Gayathri's walkthrough memory lane hosted by The big tooth 

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/