Sunday, November 19, 2017

கறி முருங்க்காய் சால்னா/Mutton Drumstick salan

பேலியோ டயட் கடைபிடிப்பவர்களுக்கு இந்த ரெசிபி உதவும். இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் அசைவ பக்க உணவுகளுடன் பேலியோவில் சொல்ல பட்ட  எண்ணை வகைகளை சேர்த்து கொண்டால் மிகவும் இலகு.

மட்டன் கூட எல்லா காய்கறிகளும் நாங்கள் சேர்த்து செய்வோம்/
மட்டன் முருங்கக்காய் சால்னா
மட்டன் உருளை சால்னா
மட்டன் கத்திரிக்காய் சால்னா
மட்டன் வெண்டைக்காய் சால்னா
மட்டன் கருனை கிழங்கு சால்னா
என்ன காய்கள் சேர்க்கும் நேரமும் வேக வைக்கும் நேரமும் மாறுபடும்

என் யுடியுப் சேனலில் முடிந்த அளவு குறிப்புகள் போஸ்ட் பண்ணி கொண்டு இருக்கிறேன்,.

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து சப்ஸ்கிரைப் செய்ய கொள்ளுங்கள்

இந்த பிலாக் ஆரம்பித்து 7 வருடங்கள் மேல் ஆகி விட்டது,


யாருக்கு என்ன குறிப்பு போடனும் என்று சொன்னாலும் செய்து வீடியோவாக தர பார்கிறேன்.


இத்தனை வருடம் ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி இனியும் உங்கள் அனைவரின் ஆதரவும் தொடரும் என நம்புகிறேன்.
என் குறிப்புகளை செய்து பார்ப்பவர்கள் அதை சுவையை இங்கே பகிர்ந்து கொண்டால் மிகவும் சந்தோஷ படுவேன்.

மட்டனுடன் மற்ற காய்கள் போடுவதை விட முருங்கக்காய் சேர்த்து செய்தால் கம கமன்னு 10 வீட்டு கதவை தட்டும்.. இந்த சாலானாவின் வாசனை...

கறி முருங்ககாய் சால்னா

தேவையான பொருட்கள்

கறி மட்டன் 1/2 கிலோ
வெங்காயம் 2
தக்காளி 2
முருங்கக்காய் 2
நல்லெண்ணை
நெய்
தயிர் கால் கப்
பட்டை ஏலக்காய் லவங்கல்
தனியா தூள் 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் ‍ 1 தேக்கரண்டி
ம்ஞ்சள் தூள் ‍ கால் தேக்கரண்டி
உப்பு ‍ தேவைக்கு
தேங்காய் ‍ கால் கப்


செய்முறை

குக்கரில் நல்லெண்ணை + நெய் போட்டு பட்டை லவங்கம் ஏலக்காய் பெரிய ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் நீளவாக்கில் அரிந்து சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் மடங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து பச்ச வாடை போக நன்கு வதக்கவும்.
அடுத்து தக்காளி, பச்சமிளகாய் புதினா கொத்துமல்ல்லி எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்
தக்காளி மடங்கியதும் மசலா தூள் வகைகளை சேர்த்து கிளறி 5 தயிர் சேர்த்து வதக்கவும். இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றில் குக்கரை மூடி மட்டனை வேக விடவும், 5 விசில் விட்டு இரக்கவும்.
குக்கர் ஆவி அடங்கியதும் முருங்க்க்காயை கட் செய்து சேர்த்து தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்க விட்டு இரக்கவும். முருங்க்காய் சேர்த்ததும் 5 நிமிடத்தில் வெந்துவிடும் ரொம்ப நேரம் விட்டால் குச்சி தான் மிஞ்சும். குக்கரில் இருந்து சால்னாவை வேறு ஒரு சட்டிக்கு மாற்றி விட்டு முருங்க்கக்காய் , தேங்காய் சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.

Linking to   #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.  

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975https://www.facebook.com/Samaiyalattakaasamhttp://www.chennaiplazaki.com/

Moringa Leaves poriyal - முருஙக்க்கீரை பெரட்டல்/பொரியல்

https://youtu.be/3AfAivpZpXc
ரொம்ப சுலபமாக செய்துடலாம், வெளிநாடுகளில் முருங்கீரை கிடைப்பதில்லை,  அதற்கு நீங்கள் ஊரிலிருந்து எப்படி பருப்புபொடி, கருவேப்பிலை பொடி எல்லாம் தயார் செய்து கொன்டு வருகீர்களோ அதே போல முருங்ககீரை பொடி செய்து கொண்டு வந்து பயன் படுத்தலாம்.
வாரம் முன்று முறை முருங்க்ககீரை எடுத்து கொண்டால் , பெண்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் ஒரு நல்ல மருத்துவ குறிப்பாக அமையும்.

கர்பிணி பெண்களுக்கு , பூப்பெய்திய பெண்களுக்கு, கருத்தரித்துள்ள பெண்களுக்கு , இன்னும் ரத்த சோகையால் வெளிறி போயிருப்பவர்களுக்கு அனைவருக்கும் ஏற்ற அருமருந்து இந்த முருங்கீரை.
https://youtu.be/3AfAivpZpXc
முருங்கக்கீரை பெரட்டல் 

முருங்ககீரை - இரண்டு கப்
தேங்காய் -  அரை மூடி 

தாளிக்க
நெய் - ஒரு மேசைகரண்டி
உளுந்து பருப்பு - அரை தேக்கரண்டி
காஞ்ச (நீட்டு) மிளகாய் - 4 எண்ணிக்கை
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 6 பல்லு
வெங்காயம் - 2 பெரியது
உப்பு தேவைக்கு
வெந்த பருப்பு - சிறுபருப்பு (அ) துவரம்பருப்பு - இரண்டு மேசைகரண்டி


​செய்முறை

முருங்கக்கீரையை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் நெய்யை ஊற்றி சூடு படுத்தி காஞ்ச மிளகாய், பூண்டுதட்டி போட்டு, சீரகம், உளுந்து பருப்பு சேர்த்து நன்கு வதக்கி , வெங்காயத்தை பொடியாக அரிந்து சேர்த்து வதக்கி முருங்ககீரை , உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
கடைசியாக தேங்காய் பூ சேர்த்து , வெந்த பருப்பை சேர்த்து நன்கு கிளறி  5 நிமிடம் வதக்கி இரக்கவும்.

கவனிக்க: முருங்கக்கீரை பெரட்டலுக்கு தேங்காய் + வெங்காயம் அதிகமாக போட்டால் தான் நல்ல இருக்கும் ,பெரிய வெங்காயம் பதில் சின்ன வெங்காயம் சேர்த்தால் கூடுதல் சுவைகிடைக்குhttps://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975https://www.facebook.com/Samaiyalattakaasamhttp://www.chennaiplazaki.com/

வெஜ் கப்ஸா ( அரபிக் வெஜ் பிரியாணி) Arabic Veg Kabsa
Preparation Time: 15 minutes
Cooking timne : 20 minutes
Serves : 4 person
Key Iron Ingredients - Beetroot,Broccoli,tomato paste

அரபு நாடுகளில் சாப்பிடும் உணவுகளில் மட்டன் கப்சா, சிக்கன் கப்சா, இறால் கப்சா , மீன் கப்சா என்று பல வகை உண்டு, அதை சைவ விருப்ம்பிகளும் சுவைக்க வேண்டும் என்பதால் பீட்ரூட் , ப்ரோக்கோலில் செய்துள்ளேன்.

வெஜ் கப்ஸா ( அரபிக் வெஜ் பிரியாணி)

தேவையான பொருட்கள்

 1. தரமான பாசுமதி அரிசி -  அரைகிலோ
 2. எண்ணை + பட்டர் – 50 கிராம்
 3. காய்ந்த எலுமிச்சை – 1
 4. வெங்காயம் – 1 பெரியது
 5. கேரட் – 50 கிராம்
 6. பீட்ரூட் – 50 கிராம்
 7. கார்ன் – 50 கிராம்
 8. புரோக்கோலி – 50 கிராம்
 9. தக்காளி பேஸ்ட் – 25 கிராம்
 10. தக்காளி – அரை பழம்
 11. மேகி அல்லது நார் பிராண்ட் வெஜிடேபுள் ஸ்டாக் 1 துண்டு


அரபிக் கப்ஸா மசாலா
 1. கருப்பு மிளகு தூள் – அரை தேக்கரண்டி
 2. சீரகம் – முக்கால் தேக்கரண்டி
 3. பப்பரிக்கா – கால் தேக்கரண்டி
 4. முழுதனியா – ஒரு தேக்கரண்டி
 5. கிராம்பு - 2
 6. ஜாதிக்காய் – கால் தேக்கரண்டி
 7. பட்டை – 1 இன்ச் பீஸ்
 8. ஏலக்காய் - 1செய்முறை
 1. வெஜிடேபுள் ஸ்டாக்கை 3 ½ டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து வைக்கவும்.
 2. அரிசியை களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்,
 3. குக்கரில் எண்ணை + பட்டரை காயவைத்து காய்ந்த  எலுமிச்சை ,வெங்காயம் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
 4. அடுத்து தக்காளி ,தக்காளி பேஸ்ட் மற்றும் அரபிக் மசாலாவை  சேர்த்து கிளறவும். பிறகு காய்களை சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
 5. அரிசியை தண்ணீரை வடித்து சேர்த்து சமப்படுத்தி.காய் வெந்ததும் அதில் வெஜிடேபுள் ஸ்டாக்கை ஊற்றி கொதிக்க விட்டு வறுத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, 2, 3 விசில் விட்டு இரக்கவும், சுவையான அரபிக் வெஜ் கப்ஸா (அரபிக் பிரியாணி) ரெடி. காய்கறி சல்சாவுடன்சாப்பிட அருமையாக இருக்கும்.
கவனிக்க: அரேபியர்கள் காரம் அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள். இந்த பிரியாணி லைட்ஆக அதே நேரத்தில் ஹெல்தியாகவும் இருக்கும். நான்வெஜ் பிரியர்கள் மட்டன் சிக்கனில் செய்துகொள்ளலாம்.
Linking to   #livogenironchef the Iron Chef contest on IndiBlogger. 


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

பிஸ்தா தேங்காய் பர்பி

தேங்காய் பர்பி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் அதில் முந்திரி பாதம் போட்டு செய்வதை விட கொஞ்சம் வித்தியாசமாக பிஸ்தா பருப்பை பொடிட்து செய்து சாப்பிட்டு பாருங்கள். சுவை அருமையாக இருக்கும்

( பேலியோ டயட் பாலோ செய்பவர்கள் சர்க்கரை தவிர்த்து செய்து சாப்பிடலாம்.)
ஆயத்த நேரம் : 5 நிமிடம்
சமைக்கும் நேரம் : 10 - 15 நிமிடம்பிஸ்தா தேங்காய் பர்பி

தேங்காய் துருவல் – 200 கிராம் ஃப்ரஷ் அல்லது ரெடிமேட்
சர்க்கரை – 200கிராம்
தண்ணீர் ‍- கால் கப்
பிஸ்தா – அரை கப்
ஏலப்பொடி   அரை தேக்கரண்டி
நெய் - ஒரு மேசை கரண்டி

செய்முறை

ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் நெய் ஊற்றி பிஸ்தாவை பொடித்து சேர்த்து வறுத்து அதே பாத்திரத்தில் தேங்காயையும் போட்டு றுத்து ர்க்கரை சேர்த்து கால் ப் ண்ணீர் விட்டுஅப்படியே கிளறி சுருண்டு ரும் வரை கிளறவும்.
நெய் விய‌ ட்டில் ஊற்றி சமமாக பரப்பி விட்டு சிறிது நேரத்தில் துண்டு போட்டு விடவேண்டும்.சிறிது நேரம் கழித்து துண்டு போட்டால் சரியாக துண்டு போட வராது.
இது அவரவர் விருப்பமான வடிவத்தில் கட் பண்ணலாம்ஆறியதும் பிரித்து எடுத்து ஒரு ண்டெயினரில் போட்டு வைக்கவும். 15 நாள் ரை கெடாதுசுவையான ட்ஸ் தேங்காய் ர்பி ரெடி


தேஙகாய் உணவுகள்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, November 16, 2017

கிரீன் கார்டன் சூப் - Green Garden Soup

  Mixed Green Leaves Soup 
Iron Chef Contest (key iron ingredients): Mixes Leaves ( parsely,palak,coriender leaves,mint, curry leaves,oreigano and basil)
Type of dish - Daily or Dinner/ Party
Preparation Time : 20 min
cooking time : 20 min

கிரீன் கார்டன் சூப் - Green Garden Soup


ஒரு கீரை வாரம் முன்று முறை சமைத்து சாப்பிட்டால் எல்லா சத்துகளும் ஒருங்கே கிடைத்து பல வியாதிகளில் இருந்து விடுபடலாம்
அதே ஆல் இன் ஒன் ஆக பல கீரைகளை ஒரே சூப்பீல் சேர்த்து வாரம் ஒரு முறை குடித்தால் செம்ம இல்லையா??

டயட் என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்டால் நான் முதலில் குறிப்பிடுவது சூப் தான். நல்ல இரண்டு டம்ளர் சுட சுட குடித்து பாருங்கள். வயிறு நல்ல பில்லிங்காக இருக்கும்.
இது பேலியோ டயட் பாலோ செய்பவர்களுக்கும் , கர்பிணி பெண்களுக்கும் , குழந்தைகளுக்கும் நோயளிகளுக்கும், வயதானவ்ர்களுக்கும் இது சரியான சத்தான சூப்


பச்சை காய்கறிகள் கீரைவகைகளில் அதிகம் இரும்பு {Iron) சத்து உள்ளது. இது  குழந்தைகள், கர்பிணி பென்கள்,வயதானவர்கள் அனைவருக்கும் மிகவும் நல்லது. பொதுவாக சூப் வகைகள் குடிப்பதால் உடம்பி சளி சேருவது கட்டு படும்.

தேவையானவை

வேகவைக்க

 1. பார்சிலி இலை ( சாலட் இலை) – ¼ கப்
 2. பாலக் கீரை – ½ கப்
 3. தில் கீரை – ½ கப்
 4. வெங்காய தாள் – 3 ஸ்டிக்ஸ்
 5. கொத்துமல்லி கீரை – 1 மேசைகரண்டி
 6. புதினா – 5 இலை
 7. கருவேப்பிலை – 5 இலை
 8. ஒரிகனோ – ½ தேக்கரண்டி
 9. பேசில் இலை – ½ தேக்கரண்டி
 10. வெள்ளை மிளகு தூள் -  ½ தேக்கரண்டி
 11.   மரவள்ளி கிழங்கு or pumpkin – 1 மீடியம்
 12. கருப்பு மிளகு தூள் – ½ + ½ தேக்கரண்டி
 13. சர்க்கரை – ½ தேக்கரண்டி
 14. நார் சூப் கியுப் (வெஜ் அல்லது சிக்கன் ப்ளேவர்) – 1  (10 கிராம்)


தாளிக்க
 1. பூண்டு (பொடியாக அரிந்த்து)
 2. வெங்காயம் – 1 சிறியது
 3. ஆலிவ் ஆயில்

 செய்முறை
 1. கீரைவகைகள் அனைத்தையும் மண்ணில்லாமல் கழுவி தண்ணீரை வடிக்கவும்.
 2. குக்கரில் கீரை வகைகளை சேர்த்து அதில் ஒரிகனோ, பேசில் இலைகள் , வெள்ளை மிளகு தூள், கருப்பு மிளகு தூள் , சர்க்கரை, உப்பு, சூப் கியுப், தண்ணீர் முன்பு டம்ளர் சேர்த்து 3 ,  4 விசில் விட்டு இரக்கவும்.
 3. வெந்த கீரை வகைகளை ஆறவைத்து மிக்சில் அல்லது ப்ளெண்டரில் முக்கால் பத்த்துக்கு அரைக்கவும்.வெந்த சூப்பை குளிர வைத்து முக்கால் பதமாக அடிக்கவும்.
 4. ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் வெங்காய தாள் மற்றும் பூண்டை சேர்த்து தாளித்து ப்ளென்ட் செய்த சூப்பில் சேர்த்து 5 நிமிடம் கொதித்த விட்டு இரக்கவும். கட்லெட் உடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
 5. காரம் தேவைபடுபவர்கள் மிளகு தூளின் அளவை சிறிது கூட்டி கொள்ளவும்.ஜலீலாவின் டிப்சோ டிப்ஸ்: பச்சை காய்கறிகள் கீரைவகைகளில் அதிகம் இரும்பு சத்து உள்ளது. இது  குழந்தைகள், கர்பிணி பென்கள்,வயதானவர்கள் அனைவருக்கும் மிகவும் நல்லது. பொதுவாக சூப் வகைகள் குடிப்பதால் உடம்பி சளி சேருவது கட்டு படும்.

பொதுவாக நோன்பு காலங்களில் மாலை நோன்பு திறக்கும்  போது தினம் அரிசி பருப்பு  நோன்பு கஞ்சி குடிப்போம் பச்சை கீரை வகைகள் யாரும் சாப்பிடுவதில்லை அதற்கு பதில் இப்படி வித்தியாசமான சூப்பாக செய்து சாப்பிடலாம்.

linking to  #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.http://www.livogen.in/iron-chef/
கவனிக்க :மரவள்ளி கிழங்குக்கு பதில் இதில் சர்க்கரை வள்ளி மற்றும் உருளை கிழங்கும் சேர்த்து செய்யலாம்.

இதில் மரவள்ளி கிழங்கு சேர்த்துள்ளேன் , பேலியோ டயட் செய்பவர்கள் மரவள்ளி கிழங்க்கு கு பதில் பூசனிக்காய் சேர்த்து கொள்ளுங்கள்


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

கிரீன் மசாலா அன்ட் ரெட் மசாலா Whole chicken grill
கேஸில் எண்ணை ஊற்றி சமைப்பதை விட கிரில்லில் செய்வது சுலபம் என்ன முன்னாடியே பிலான் பண்ணனும். ஒரு நாள் முன் மசாலாக்கள் தயார் செய்து ஊறவைக்கவும் சாப்பிட ஒன்னறை மணி நேரம் முன் கிரில்லில் வைக்கனும்.
பேலியோடயட் மற்றும் டயட் செய்பவர்களுக்கு இது அருமையான ரெசிபி.


Whole Grill Chicken Red and green masala
Chicken : Iron Recipes
Preparation time : 1/2 hours + over night marinating time)
cooking time - 1 hour + 10 min
serves : 5முழு கோழி கிரில்
கிரீன் மசாலா அன்ட் ரெட் மசாலா

முழு கோழி தோலுடன்இரண்டு பெரியது

கிரீன் மசாலா
முழு கோழி - ஒன்று

அரைக்க புதினா அரைகப், பச்சமிளகாய் 2, கொத்துமல்லி தழை - அரைகப் பூண்டு 8 பல், ஒரிகானோ அரை தேக்கரண்டி எல்லாம் சேர்த்த்து அரைக்கவும்.

உப்பு  - ஒரு  தேக்கரண்டி
மிளகு தூள்சிறிது
ஆலிவ் ஆயில்அரை கப்
லெமன் சாறுஒரு மேசைகரண்டி

செய்முறை 

முழு கோழியை நன்றாக கழுவவும் , வினிகர் சேர்த்து கழுவலாம். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக அரைக்கவும்.
முழு கோழி ஒன்றை  நன்றாக கழுவி ஆங்காங்கே கீறி விட்டு மேலே உள்ள மசாலாவை  தடவவும்.


கோழியின் காலுக்கு இடையில்பிரிஞ்சி இலை, காய்ந்த லெமன்  (அ) லெமன் ஸ்லைஸ்அன்னாச்சி பூ , பூண்டு வைக்கவும் இது கிரில் ஆக ஆக வாசனை அருமையாக இருக்கும்.
செய்வதற்கு ஒரு நாள் இரவே ஊறவைக்கவும்.
ஓவனில் கோழி சுட கொடுத்துள்ள  (ரொட்டேடிங்) கம்பியில்  கோழியை சொருகி செட் செய்து 200 டிகிரி முற்சூடு படுத்திய ஓவனில் ஒரு மணி நேரம் பேக் செய்ய வேண்டும்.
இடையில் சிறிது செக் செய்து ஆலிவ் ஆயில் ஸ்ப்ரெட் செய்துகொள்ளலாம்.
கவனிக்க: கடையில் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும் அது போல வேண்டும் என்றால் சிறிது கிரீன் புட் கலரிங் சேர்த்து கொள்ளலாம்.
ரெட் மசாலா

முழு கோழி ஒன்று
ஆச்சி 65 கபாப் மசாலா – 50 கிராம்
மிளகாய் தூள் – 25 கிராம்
உப்புஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட்ஒரு மேசைகரண்டி
லெமன் சாறுஒரு மேசைகரண்டி

செய்முறை

முழு கோழி ஒன்றை நன்றாக வினிகர் சேர்த்து கழுவும்.மேலே கொடுத்துள்ள மசாலா வகைகளை சேர்த்து நன்கு கோழியில் எல்லா பாகமும் தடவவும்.
கோழியின் காலுக்கு இடையில்பிரிஞ்சி இலை, காய்ந்த லெமன்  (அ) லெமன் ஸ்லைஸ்அன்னாச்சி பூ , பூண்டு வைக்கவும் இது கிரில் ஆக ஆக வாசனை அருமையாக இருக்கும்
ஓவனில் கோழி சுட கொடுத்துள்ள  (ரொட்டேடிங்) கம்பியில்  கோழியை சொருகி செட் செய்து 200 டிகிரி முற்சூடு படுத்திய ஓவனில் ஒரு மணி நேரம் பேக் செய்ய வேண்டும்.
இடையில் சிறிது செக் செய்து ஆலிவ் ஆயில் ஸ்ப்ரெட் செய்துகொள்ளலாம்.
lInking to #livogenironchef the Iron Chef contest on IndiBlogger. 
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/